க/பெ ரணசிங்கம் 10 சர்வதேச மொழிகளில் வெளியீடு!
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் க/ பெ ரணசிங்கம். இந்த திரைப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பெ.விருமாண்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமுத்திரக்கனி, ‘பூ’ ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ என பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தில் ரங்கராஜ் பாண்டே ஒரு அரசு அதிகாரியாக நடிக்கிறார்.
படத்திற்கு இசை ஜிப்ரான். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்தப் படத்திலிருந்து சமீபத்தில் முதல் பாடல் வெளியானது. கொரோனா பாதிப்பின் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போனது. தற்போது இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் 5 இந்திய மொழிகள் மற்றும் 10 சர்வதேச மொழிகளில் நேரடியாக இப்படம் வெளியாக விருப்பதாக தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் திரையரங்கு மூடப்பட்டிருப்பதால் தமிழ் சினிமாவில் பெண்குயின், பொன்மகள் வந்தாள் படங்கள் ஓடிடி தளத்தில் ஏற்கனவே வெளியானது.
அதைத் தொடர்ந்து சமீபத்தில் சூர்யாவின் சூரரைப்பேற்று திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த வரிசையில் க/பெ. ரணசிங்கம் படமும் வெளியாகும் என தெரிவிக்கின்றனர். திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருவதால்’ படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
-யாழினி சோமு