துபாயில் களைகட்டிய சூர்யாவின் ‘சீன்’: தீபாவளிக்கு விருந்தாகும் ஃபிரெஷ் என்டர்டெய்னர்!
ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா – சூர்யா தயாரிப்பில், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படத்தின் முதல் பிரத்யேக விளம்பர நிகழ்வு துபாயின் பிரபல வணிக வளாகத்தில் உற்சாகமாக நடைபெற்றது.
இப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். ஜெயஸ்ரீ தாமோதரன் இணை தயாரிப்பாளராகப் பணிபுரியும் இப்படம், ஒரு மாஸ் ஆக்சன் ஃபேமிலி என்டர்டெய்னராக வருகிற நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நிகழ்வில் படக்குழுவினர் பேசிய முக்கிய விவரங்கள்:
-
இணை தயாரிப்பாளர் ஜெயஸ்ரீ தாமோதரன்:
-
ழகரம் என்பது சூர்யா அண்ணாவின் கனவு; அதை நனவாக்கும் முயற்சியே ‘ழகரம் ஸ்டுடியோஸ்’. ‘சூரரைப் போற்று’, ‘ஜெய் பீம்’ வரிசையில் 2டி நிறுவனத்தைத் தாண்டி இங்கும் தரமான படங்களைத் தயாரிக்கிறோம்.
-
இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்தில் முற்றிலும் புதிய உலகத்தை உருவாக்கியுள்ளார். படத்தின் வெளியீட்டிற்கு ஆதரவு தந்துவரும் அனைவருக்கும் நன்றி.

-
-
2டி என்டர்டெய்ன்மென்ட் ராஜசேகர் பாண்டியன்:
-
ழகரம் ஸ்டுடியோஸின் அழகான தொடக்கம்தான் இந்தத் திரைப்படம். தியேட்டரில் பார்க்கும்போது இது ரசிகர்களுக்கு வித்தியாசமான, கலகலப்பான அனுபவத்தைத் தரும். வித்தியாசமான சூர்யாவை இப்படத்தில் ரசிகர்கள் பார்க்கலாம்.
-
-
இயக்குநர் ஜித்து மாதவன்:
-
இந்தப் படத்தின் கதையை சூர்யா சாரிடம் சொன்னபோது, ஐந்தாவது நிமிடமே அவர் சிரிக்கத் தொடங்கிவிட்டார்; அப்போதே கதை அவருக்குப் பிடித்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்டேன்.
-
தற்போது மொழி எல்லைகள் மறைந்துவிட்டன. கேரளாவில் தமிழ்ப் படங்களும், தமிழகத்தில் மலையாளப் படங்களும் பெரியளவில் வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும்.
-
-
நடிகர் நஸ்லென்:
-
இது எனது முதல் தமிழ்த் படம் என்பதால் மிகவும் ஸ்பெஷலாக உணர்கிறேன். சூர்யா, நஸ்ரியா, ஜித்து ஆகியோருக்கு நன்றி.
-
சிறுவயது முதல் திரையில் பார்த்து ரசித்த நடிகருடன் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது என் மனம் வெற்றிடமாகி, கனவு நனவானது போல் ஆச்சரியத்தில் மிதந்தேன். நவம்பர் 6-ஆம் தேதி தியேட்டரில் பார்த்து ஆதரவுளியுங்கள்.
-
-
நடிகை நஸ்ரியா நஜீம்:
-
நான் பிறந்து வளர்ந்த துபாய்க்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி. 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்கிறேன். இயக்குநர் ஜித்துவுக்கும், சூர்யா மற்றும் நஸ்லென் ஆகியோருக்கும் நன்றி.
-
சூர்யா சார் படங்களில் சிறுவயது முதல் ரசித்து வந்த நிலையில், அவருடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம். படம் பார்த்து அனைவரும் வயிறு குலுங்க சிரிப்பீர்கள்.
-
-
நடிகர் சூர்யா:
-
இயக்குநர் ஜித்து மாதவனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன்; அது இந்தப் படத்தின் மூலம் நிகழ்ந்துள்ளது. அவர் எப்போது போல இதிலும் ஒரு புதிய உலகத்தை உருவாக்கியுள்ளார்.
-
நஸ்ரியா ‘மாயா’ கதாபாத்திரத்தில் முழுமையான பங்களிப்பை அளித்துள்ளார். தமிழில் அறிமுகமாகும் நஸ்லென் மிகப்பெரிய மேஜிக்கை நிகழ்த்தியுள்ளார்; அவர் இன்னும் பல தமிழ்ப் படங்களில் நடிப்பார்.
-
இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் உள்பட பல திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்கள்.
-
திரையுலகில் 28 ஆண்டுகளில் 48 படங்களை நிறைவு செய்துள்ளேன். இந்தப் பயணம் எனக்கு மிகவும் புத்துணர்ச்சியானது. தீபாவளிக்கு வெளிவந்த ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ போன்ற படங்களைப் போலவே ‘சீன்’ திரைப்படமும் ஃபிரஷ்ஷான க்ரைம் த்ரில்லர் மற்றும் மர்டர் மிஸ்டரி கலந்த ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும்.
-
2டி நிறுவனம் வழக்கமான தரமான பொழுதுபோக்கு படங்களைத் தொடர்ந்து வழங்கும். அதேசமயம் ழகரம் ஸ்டுடியோஸ் மூலம் புதிய இளம் திறமைசாலிகளைக் கண்டறிந்து அறிமுகப்படுத்துவோம்.
-
இன்ஸ்டாகிராமில் நல்ல விஷயங்களைப் பார்த்தால் அதுவே வாழ்க்கையிலும் எதிரொலித்து மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும். எப்போதும் நல்ல எண்ணங்களை மட்டுமே சிந்தியுங்கள். தீபாவளிக்குத் திரையரங்குகளில் வெளியாகும் படத்தை அனைவரும் குடும்பத்துடன் கண்டு ரசியுங்கள் என்றார்.
-

