‘ஆதி ருத்ரா’: ‘காந்தாரா’வை தொடர்ந்து, அடுத்த தெய்வீக த்ரில்லர்! ஜனவரியில் பிரம்மாண்டத் தொடக்கம்!

‘ஆதி ருத்ரா’: ‘காந்தாரா’வை தொடர்ந்து,  அடுத்த தெய்வீக த்ரில்லர்!  ஜனவரியில் பிரம்மாண்டத் தொடக்கம்!

காந்தாரா படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதே போன்ற தெய்வீகம், ஆன்மிகம் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்துடன் உருவாகும் புதிய பான் இந்திய திரைப்படமான ‘ஆதி ருத்ரா’ ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாகத் தயாராகிறது. ஆதி சாய்குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை நவரசன் எழுதி இயக்குகிறார்.

Trishul Entertainments நிறுவனத்தின் சார்பில் பிரசாந்த் G ருத்ரப்பா தயாரிக்கும் இப்படத்திற்கு, காந்தாரா, விருபாக்ஷா, மகாராஜா உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களுக்கு இசையமைத்த B. அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். மேலும், A.J. ஷெட்டி ஒளிப்பதிவுப் பணிகளைக் கவனிக்கிறார்.1960 முதல் 1990 வரையிலான காலக்கட்டத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதை, தெய்வீக மர்மங்களையும் ஆன்மிகம் மற்றும் நம்பிக்கை சார்ந்த அம்சங்களையும் மையமாகக் கொண்டுள்ளது. மர்மம், பரபரப்பு, உணர்வுப்பூர்வமான தருணங்கள் என ரசிகர்களுக்கு முற்றிலும் வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் உருவாகவுள்ளது.

தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கதையின் முக்கிய அம்சங்கள் மற்றும் திருப்பங்கள் குறித்த ரகசியங்கள் காக்கப்பட்டு வரும் நிலையில், படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts