வெற்றிக் கொடி நாட்டிய ‘இம்மார்டல்’: ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு கொடுத்து அசத்திய தயாரிப்பாளர்!

வெற்றிக் கொடி நாட்டிய ‘இம்மார்டல்’: ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு கொடுத்து அசத்திய தயாரிப்பாளர்!

கே ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் வெளியான ஃபேண்டஸி திரில்லர் படம் ‘இம்மார்டல்’. திரையரங்குகளில் வெற்றிகரமாக இயங்கிவரும் இப்படத்தின் வெற்றி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் விநியோகஸ்தர் சக்திவேலனுக்கு தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் உயர்தர கைக்கடிகாரங்களைப் பரிசளித்ததுடன், ஜிவி பிரகாஷுக்கு ஒரு மாஸ் RX100 பைக்கையும் பரிசளித்து அசத்தினார்!

ஜிவி பிரகாஷ்: “இம்மார்டல் படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பையும், பாசிட்டிவ் விமர்சனங்களையும் கொடுத்த மீடியா நண்பர்களுக்கு முதல் நன்றி! ரிலீஸான முதல் நாளிலிருந்தே கிடைத்த வரவேற்பு ரொம்பவே சந்தோஷத்தை தந்தது. சோஷியல் மீடியாவில் படம் டிரெண்டிங்கில் வந்ததைப் பார்த்தபோது தயாரிப்பாளர் அருண்குமார் சாரின் மகிழ்ச்சியை நேரில் பார்க்க முடிந்தது.

வெள்ளிக்கிழமை சின்ன ஸ்கிரீன்களில் தொடங்கி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரிய ஸ்கிரீன்கள், கூடுதல் காட்சிகள் என படத்தின் ஷோகேசிங்கை மிகச்சிறப்பாக மாற்றி அமைத்த சக்தி சாருக்கு நன்றி.

இந்த கதையை முதலில் என்னிடம் கொண்டு வந்த எடிட்டர் ஷான் லோகேஷுக்கு நன்றி. முதன்முறையாக படம் தயாரிக்கும் அருண்குமார் சார், CG பணிகளுக்காக நீண்ட காலம் காத்திருந்து, குவாலிட்டியில் எந்த காம்ப்ரமைஸும் செய்யாமல் ரொம்பவே பொறுமையாக இருந்தார். அவரின் அந்த நம்பிக்கைக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி இது! புரமோஷன் மற்றும் போஸ்டர் டிசைனில் கலக்கிய கோபி பிரசன்னா சாருக்கும் அவரது குழுவிற்கும் மிகப்பெரிய நன்றி!”தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன்: தொழில்நுட்ப அம்சங்களைச் சிறப்பாக உருவாக்க வேண்டும் என்பதில் ஆரம்பத்திலிருந்தே கவனமாக இருந்தோம். படப்பிடிப்பு முதல் திருச்சி, தஞ்சாவூர் என ஊர் ஊராகச் சென்று புரமோட் செய்தது வரை முழு ஒத்துழைப்பு தந்த ஜிவி பிரகாஷுக்கும், 250-க்கும் மேற்பட்ட திரைகளில் படத்தை வெளியிட்டு வெற்றியைச் சாத்தியமாக்கிய சக்திவேலன் சாருக்கும் நன்றி!

விநியோகஸ்தர் சக்திவேலன்: ஜிவி பிரகாஷுடன் நான் இணைந்து பணியாற்றிய 7 படங்களுமே வெற்றிப் படங்கள் தான்! அவரின் கேரியரில் அதிக வசூல் செய்த 5 படங்களில் 4 படங்கள் என்னுடைய ரிலீஸ் என்பது எனக்குக் கிடைத்த பெருமை.

இயக்குநர் மாரியப்பன் சின்னா: முதல் படத்திலேயே எனக்கு ஆதரவு தந்த ஊடகங்களுக்கும், படத்தின் தரத்திற்காக உழைத்த VFX மேற்பார்வையாளர் மஹி உட்பட ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவிற்கும் நன்றி.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்: படம் நிச்சயம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஆரம்பத்திலிருந்தே இருந்தது. நேர்மறை ஆற்றலும் குழுவின் உழைப்பும் தான் இந்த வெற்றிக்குக் காரணம்.

நடிகர் கார்த்தி: ஐடி வேலையை விட்டுட்டு வந்த எனக்கு, இந்த விமர்சனங்கள் ‘நாமும் சினிமாவில் இருக்கலாம்’ என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

எடிட்டர் ராஜேஷ், ஒளிப்பதிவாளர் அருண், குமார் நடராஜன், நடிகை மிருதுளா: அனைவரும் படத்தின் CG தரம், கதைக்களம் மற்றும் கூட்டு உழைப்பே இப்படத்தின் அசாத்திய வெற்றிக்குக் காரணம் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.

Related Posts