“ட்ரோன்ஸ்” : கனவுலகில் ஒரு திகில் பயணம்! மிரட்டல் போஸ்டர்கள்!  

“ட்ரோன்ஸ்” : கனவுலகில் ஒரு திகில் பயணம்! மிரட்டல் போஸ்டர்கள்!  

தமிழ் சினிமா இதுவரை கண்டிராத ஒரு விசித்திரமான கற்பனை உலகிற்கு நம்மை அழைத்துச் செல்ல வருகிறது “ட்ரோன்ஸ்” திரைப்படம். GM Morgan Films தயாரிப்பில், இயக்குநர் R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி திரைப்படத்தின் மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி, இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.

நாம் காணும் கனவுகள் நிஜமாக மாறினால் என்னவாகும் என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கிறுக்குத்தனமான விஞ்ஞானி, மர்மங்களை துப்பறியும் டிடெக்டிவ், வானத்து தேவதை, பயமுறுத்தும் சூனியக்காரி எனப் பல சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் இந்த மாயாஜால உலகில் நம்மை வரவேற்க காத்திருக்கிறார்கள்.

வெளியாகியுள்ள மூன்று போஸ்டர்களும் மூன்று விதமான அனுபவத்தை தருகின்றன. முதல் போஸ்டர் காடு, நிலவு, தேவதை என மாயாஜால உலகைக் காட்டுகிறது. இரண்டாவது போஸ்டர் ட்ரோன்கள் மற்றும் விசித்திரக் கருவிகளுடன் சயின்ஸ் ஃபிக்ஷன் கலவையை வெளிப்படுத்துகிறது. மூன்றாவது போஸ்டரோ பொம்மைகள் நிறைந்த இருண்ட அறையில் இருக்கும் சூனியக்காரியைக் காட்டி ஹாரர் பிரியர்களை மிரட்டுகிறது.

இப்படத்தில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, பரிதாபங்கள் டிராவிட் செல்வம், விஜய் டிவி குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் மற்றும் ஆர்ஜே தீபக் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவும், ஹரி S.R. இன் இசையும், சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பும் இப்படத்திற்கு பலம் சேர்க்கின்றன.

படத்தைப் பார்த்த ஃபைவ் ஸ்டார் நிறுவனத் தயாரிப்பாளர் செந்தில், இதன் வித்தியாசமான கதையமைப்பால் ஈர்க்கப்பட்டு, உடனடியாக அகில இந்திய வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளார். இறுதிக்கட்ட பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், விரைவில் இசை மற்றும் டிரெய்லர் வெளியாகி திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளது. இந்த மாயாஜால அனுபவத்தைக் காண ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Related Posts