ஆர்யா வெளியிட்ட ‘கோல்ட் கால்’ ட்ரைலர்! புதுமுகங்களின் வெரைட்டி காமெடி 18ல் ரிலீஸ்!
புதுமுகங்களின் அட்டகாசமான கூட்டணியில் செப்டம்பர் 18-ல் திரைக்கு வரவிருக்கும் ‘கோல்ட் கால் (Cold Call)’ படத்தின் கலர்ஃபுல் ட்ரைலரை, தமிழ் சினிமாவின் எவர்ஜீன் ‘ஹேண்ட்சம்’ நடிகர் ஆர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு மாஸான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்!
இயக்குநர் தம்பிதுரை இயக்கத்தில், கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த படத்தில் சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ், சந்தோஷ் மற்றும் கிருஷ்ணா விஜய் ஆகிய நான்கு இளம் திறமையாளர்கள் கதையின் நாயகர்களாக களமிறங்கி ரகளை செய்திருக்கிறார்கள். இவர்களுடன் ஸ்ரீகாந்த், பாலாஜி ராஜசேகர், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, கீர்த்தனா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.
ஜி. என். சரவணனின் கலர்ஃபுல் ஒளிப்பதிவு, பிரணவ் கிரிதரனின் துள்ளலான இசை, சுரேஷ் ஆறுமுகத்தின் கச்சிதமான எடிட்டிங் எனத் தொழில்நுட்ப ரீதியாகவும் படம் செம பேக்கிங்காக வந்துள்ளது. ‘வாக்த்ரோ என்டர்டைன்மெண்ட்’ சார்பில் தயாரிப்பாளர் கேசவ மூர்த்தி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை ‘ஆக்சன் ரியாக்ஷன்’ ஜெனீஷ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறார்.
ட்ரைலரில் அப்படி என்னதான் இருக்கு?
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா என நான்கு தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த ‘சேல்ஸ் ரெப்’ (Sales Representative) இளைஞர்களின் லைஃப்ஸ்டைலை மையமாகக் கொண்டுதான் கதை நகர்கிறது. சந்தையில் புதுசு புதுசா வரும் பொருட்களை விற்க இவர்கள் படும் பாடு, அவர்களின் காதல், லூட்டி, மோதல், காமெடி, ஆக்சன் என ட்ரைலர் முழுக்க ஒரே எனர்ஜி மயம்தான்!
தற்போது வரைபட விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் படு தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், செப்டம்பர் 18 அன்று திரையரங்குகளில் இந்த ‘கோல்ட் கால்’ ரசிகர்களுக்கு செம ஜாலியான ஃபன் ரைடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!

