அசத்தல் ஜீவா… தூள் பறக்கும் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக்!
ஜீவாவின் மாஸான ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்து, சோஷியல் மீடியாவை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறது! கிராமத்து மண்வாசனை, அப்பா-மகன் பாசம், ஆழமான மனித உணர்வுகள் என போஸ்டரைப் பார்த்ததுமே ரசிகர்கள் செம்ம ஹேப்பியாகி வாழ்த்துகளை அள்ளித் தெளிக்கிறார்கள்.
லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் மதுரை மண்ணின் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, பிளான் பண்ணியபடியே ஒரே மூச்சில் ஓடி இப்போது பாதி தூரத்தைக் கடந்துவிட்டது! படப்பிடிப்பு நடக்கும்போதே காட்சிகளைப் பார்த்த ஊர் மக்கள் நெகிழ்ந்துபோய் படக்குழுவைப் பாராட்டியது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு மீண்டும் பக்கா கிராமத்து கெட்டப்பில் களம் இறங்கும் ஜீவாவிற்கு, இது திரைப்பயணத்தில் மிக முக்கியமான திருப்பமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. கதாநாயகியாக ரஜிஷா விஜயன் இணைய, சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார்.
எம். சுகுமாரின் ஒளிப்பதிவு, நாகூரான் ராமச்சந்திரனின் படத்தொகுப்பு என அனுபவமிக்க தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணியில் உருவாகும் ‘தகப்பன்’, இந்த டிசம்பரில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்குத் திருவிழா விருந்தளிக்கத் தயாராகி வருகிறது!
