ஐ.ஏ.எஸ். கனவுகளுக்குச் சிறகு கொடுக்கும், சைதையாரின் மனிதநேயம்!

ஐ.ஏ.எஸ். கனவுகளுக்குச் சிறகு கொடுக்கும், சைதையாரின் மனிதநேயம்!

சென்னை:

யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வில் மாஸ் காட்டி, அடுத்த கட்டமான முதன்மைத் தேர்வுக்கு வெறித்தனமாகத் தயாராகி வரும் மாணவ – மாணவியருக்கு சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி உதவித் தொகைகளை வழங்கி அசத்தியுள்ளார்.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகவே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கான தேர்வுகளுக்கு மட்டுமின்றி, டி.என்.பி.எஸ்.சி. குரூப் – 1, குரூப் – 2, குரூப் – 2 ஏ வரை அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகும் இளைஞர்களுக்கு ‘மனிதநேய அறக்கட்டளை’ தோள் கொடுத்து வருகிறது.

இவர்களின் இந்த அன்பான கரங்களால், இதுவரை ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் கல்வி ஊக்கத்தொகை பெற்று, இன்றைக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் உயர்பதவிகளில் கம்பீரமாக முத்திரை பதித்து வருகின்றனர்!

அந்தப் பெருமிதமானப் பயணத்தின் அடுத்த கட்டமாகத்தான், யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வை எதிர்நோக்கியிருக்கும் 300-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியருக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னையில் கோலாகலமாக நடந்தது.

விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்குத் தலா 15,000 ரூபாய் நிதி உதவியை, மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமி அவர்கள் மனதார வழங்கி வாழ்த்தினார். அத்துடன் நின்றுவிடாமல், தேர்வை எப்படித் திறம்பட எதிர்கொள்வது என்பதற்கான இணையவழிப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்களும் மாணவர்களுக்குக் கச்சிதமாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற டி.ஜி.பி. அலெக்சாண்டர், தமிழ்நாடு மற்றும் கேரள மாநில முன்னாள் முதன்மை கணக்கு பொதுத் தலைவர் நாகல்சாமி உள்ளிட்ட பல முக்கியமான பிரமுகர்கள் கலந்துகொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்!

Related Posts