கான்சிட்டி: கான்சிட்டி: விறுவிறுப்பான ஃபேமிலி த்ரில்லர்!

கான்சிட்டி: கான்சிட்டி: விறுவிறுப்பான ஃபேமிலி த்ரில்லர்!

த்ரில்லர் படங்களில் பல வகை உண்டு. அதில் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறது, “ஃபேமிலி த்ரில்லர்”. குடும்பமாகச் சேர்ந்து அதிரடி வேலைகளில் இறங்குவது. அந்த வரிசையில் வந்திருக்கிறது, கான்சிட்டி.

பள்ளியில் இருந்து தனது மகனை அழைத்து வரச் செல்லும் அர்ஜுன் தாஸின் மகனை யாரோ கடத்திச் செல்கிறார்கள். அங்கிருந்து தொடங்கும் தேடல், பெரும் பண மோசடி கும்பல் ஒன்றுடன் இணைகிறது. இந்த மோசடியின் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன, அர்ஜுன் தாஸ் தன் மகனை எப்படி மீட்கிறார் என்பதே படத்தின் விறுவிறுப்பான கதைக்களம்.

அர்ஜுன் தாஸ் வழக்கம் போலவே கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். பணப்பிரச்சினையில் தவிப்பது, காதலியின் தந்தை முன்னே அவமானப்படுவது, அதைப் போக்க ஆபத்தான களத்தில் இறங்குவது என அற்புதமான நடிப்பை அளித்து இருக்கிறார். கதையின் மையமாகத் திகழும் இவரது தனித்துவமான குரல் மற்றும் ஸ்டைலான நடிப்பு ஈர்க்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ஒரு ரிச் மற்றும் எலைட் லுக்கில் ஈர்க்கிறார்.

அன்னா பென், கொடுத்த கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாகவும், பொறுப்பாகவும் செய்துள்ளார். இவருடைய வசன உச்சரிப்பு மற்றும் உடல்மொழி சிறப்பாக உள்ளது.

வடிவுக்கரசி தூள் பறத்தியிருக்கிறார். அவ்வப்போது அவர் வெளிப்படுத்தும் டைமிங் காமெடி ரசிக்க வைக்கிறது. “நீங்க வெயிட் பண்ற நேரத்துல காபி போட்டு வரவா” என்பது ஒரு உதாரணம்.

யோகி பாபு, படத்துக்குப் பாரமாக இருக்கிறார். வடிவுக்கரசியுடனான காமெடி காட்சியில் இவர் மவுனமாக இருந்தாலே ரசிக்கலாம். கவுண்டர் என்ற பெயரில் ஏதாவது சொல்லி அந்த காமெடியையே நீர்த்துப்போகச் செய்கிறார்.

இனியாவது இயக்குநர்கள் யோகிபாபுவிடம் கால்ஷீட் வாங்கிவிட்டு, அவரது போட்டோக்களை மட்டும் பயன்படுத்தி படம் எடுக்க வேண்டும். படத்துக்கு நல்லது.

விடிவி கணேஷ் அதகளம் செய்கிறார். இவருடைய டைமிங் நகைச்சுவை, படம் முழுவதும் சிரிக்க வைக்கிறது.

ஷான் ரோல்டன் இசை படத்துக்குப் பலம். ஜாலியான, க்ரைம் த்ரில்லருக்கு ஏற்ற துள்ளலான பின்னணி இசை கவர்கிறது.

அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு சிறப்பு. வீடு, வில்லன் குடோன் எனப் பல லொகேஷன்களில் விதவிதமான கோணங்களில் காட்சிகளை அளித்திருக்கிறது. எதார்த்தமான அதேசமயம் எலைட் லுக்கில் காட்சிகளை அமைத்ததற்காக இவரைப் பாராட்டலாம்.

அருள் மோசஸ் எடிட்டிங் கச்சிதம்.

ஃபேமிலி த்ரில்லரை நகைச்சுவையுடன் கொடுத்து அசத்தியிருக்கிறார், இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்.

அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.

Related Posts