‘யெல்லோ’ to ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்.. தொடர்ந்து சிக்ஸர் அடிக்கும் வைபவ் முருகேசன்!
யெல்லோ’ கொடுத்த மெகா ஹிட் வைபிற்குப் பிறகு, மீண்டும் ஒரு அதிரடி ஆட்டத்திற்குத் தயாராகிவிட்டார் வைபவ் முருகேசன்! ZEE5-ல் ஜூன் 26-ம் தேதி வெளியாகவிருக்கும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ தொடர் மூலம், ரசிகர்களை மீண்டும் தன் வசம் ஈர்க்க வருகிறார் இந்த வளர்ந்து வரும் நட்சத்திரம்.
கிரிக்கெட் வெறி கொண்ட கிராமத்து இளைஞர்கள், சென்னை பயணம், எதிர்பாராத மோசடி என விறுவிறுப்பாக நகர்கிறது ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கதை. காமெடி, செண்டிமெண்ட், லட்சியம் என ஒரு கம்ப்ளீட் பேக்கேஜாக உருவாகியுள்ள இந்தத் தொடரில், வைபவ் முருகேசனின் நடிப்பு ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கும்.
ஒரே நாளில் உச்சம் தொட்டவர் அல்ல இவர்; 10 வயதிலிருந்தே மேடை நாடகங்கள், கடின உழைப்பு, ‘வதந்தி’, ‘அமரன்’ எனப் படிப்படியாகத் தனது திறமையை நிரூபித்து வந்தவர். ‘யெல்லோ’ படத்தில் நாயகனாக மிரட்டியவருக்கு, சிறந்த அறிமுக நாயகனுக்கான விருதும் தேடி வந்தது.
வெறும் நடிகர் மட்டுமல்ல; செம டான்சர், பாடகர், சிலம்பம் வீரர் என பன்முகத்தன்மை கொண்ட வைபவ், ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஒரு நேர்மையைக் கொண்டு வருபவர். ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ அவரது பயணத்தின் அடுத்த முக்கியமான மைல்கல். ஜூன் 26 முதல் ZEE5-ல் இந்த நட்சத்திரத்தின் ‘ஸ்பெஷல்’ ஆட்டத்தைக் காணத் தயாராகுங்கள்!

