‘இம்மார்டல்’: சாம் இசையில் ஜி.வி.பிரகாஷ் – கயாடு, ‘காட்டேரி’ ஆட்டம்!
ஜி.வி.பிரகாஷ் – கயாடு லோஹர் நடிப்பில் உருவாகும் ‘இம்மார்டல்’ படத்திலிருந்து வெளியாகியுள்ள “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் இப்போது இணையத்தில் செம வைரல். வழக்கமான காதல் பாடல்களை ஓரம் கட்டிவிட்டு, காதலியை ஒரு ‘காட்டேரி’ என்று வர்ணித்து வரும் இந்த பாடல், கேட்கும்போதே நம்மை அறியாமல் முணுமுணுக்க வைக்கிறது.0548
சாம் சி எஸ் மற்றும் ரேஷ்மா ஷ்யாமின் குரல்கள் பாடலுக்கு உயிரூட்ட, டார்க் தீம் பின்னணியில் காட்சிகள் அதகளம் செய்கின்றன. சிவப்பு நிற டோனில் மர்மமும் அழகும் கலந்த விஷுவல்கள் கண்களுக்கு விருந்தாக இருக்கிறது. ஷாலி சி எழுதியுள்ள வரிகள், பாடலின் கருப்பொருளுக்கு ஏற்ப புதுமையாக அமைந்துள்ளன.
மொத்தத்தில், சாம் சி எஸ் தனது தனித்துவமான சவுண்ட் டிசைன் மூலம் மீண்டும் ஒரு மேஜிக்கை நிகழ்த்தியுள்ளார். பாடல் முடிந்த பிறகும் அந்த மெலடி நீண்ட நேரம் காதுகளில் ரீங்காரமிடுவதுதான் இந்த பாடலின் வெற்றி. நீங்களும் ஒருமுறை கேட்டு ரசித்து பாருங்களேன்!

