அங்கீகாரம் திரைப்படத்தின் முதல் பாடல் “சட்ட சட்ட சட்ட சான்றோரே” வெளியீடு

அங்கீகாரம் திரைப்படத்தின் முதல் பாடல் “சட்ட சட்ட சட்ட சான்றோரே” வெளியீடு

அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகிப் பாராட்டுகளைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி இணையதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது!

கார்த்திக் நேத்தா வரிகள்… ஜிப்ரான் இசை… வைக்கம் விஜயலட்சுமி பாடிய பாடல்!

ஜிப்ரான் இசையமைப்பில் ‘Contempt of Time’ என்னும் தலைப்பில் வெளியாகியுள்ள இந்த “சட்ட சட்ட சட்ட சான்றோரே” பாடலைக் கவிஞர் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். சட்டத்தையும் இந்தச் சமூகத்தையும் கேள்வி கேட்கும் வலிமையான வரிகளுடன் உருவாகியுள்ள இப்பாடலை, வைக்கம் விஜயலட்சுமி தன் உணர்வுப்பூர்வமான குரலில் பாடி அசத்தியுள்ளார். பாடலின் ஒவ்வொரு வரியும் நீதி, அங்கீகாரம் ஆகியவற்றைக் குறித்து மனதைத் தொடும் கேள்விகளை எழுப்புகிறது.

விளையாட்டுத் துறையின் பின்னணியில் ஓர் எதார்த்தப் போராட்டம்!

பல உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, தடகள விளையாட்டு வீரர்கள் சந்திக்கும் இன்னல்களையும், விளையாட்டுத் துறையில் மறைக்கப்பட்டுள்ள அவலங்களையும் குறித்துப் பேசுகிறது இந்த “அங்கீகாரம்” திரைப்படம். தனக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்காக ஒரு தடகள வீரன் நீதிமன்றம் வரை சென்று எவ்வாறு போராடுகிறான் என்பதே இத்திரைப்படத்தின் கதையாகும்.

இத்திரைப்படத்திற்காக நிஜ நீதிமன்ற வளாகத்தைப் போலவே எழுபத்தைந்து லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு, முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

சிறந்த கலைஞர்களின் கூட்டணியில் ‘அங்கீகாரம்’ குழு!

பா.ரஞ்சித்திடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய தென்பாதியான் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். கே.ஜெ.ஆர் கதையின் நாயகனாக அறிமுகமாக, அவருடன் ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்ய, பீட்டர் ஹெயின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். ஸ்வஸ்திக் விஷன்ஸ் சார்பில் பிரசாந்த், அஜித்பாஸ்கர், அருண்முருகன் ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

முன்னோட்டத்தைத் தொடர்ந்து தற்போது இந்த முதல் பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், திரைப்படத்தின் வெளியீட்டிற்காகத் திரைவிருப்பாளர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்!

Related Posts