ரசிகர்களுக்குடபுள் ட்ரீட்: ஜியோ ஹாட்ஸ்டாரில் 115 மோகன்லால் படங்கள்… கூடவே பரிசுகள்!
இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த நடிப்பு அரக்கன், நம்ம ‘கம்ப்ளீட் ஆக்டர்’ மோகன்லாலின் நாற்பது ஆண்டுகால அசுரத்தனமான திரைப்பயணத்தை வெறித்தனமாகக் கொண்டாட ரெடியாகிவிட்டது ஜியோஹாட்ஸ்டார். லெஜெண்ட் மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மே 20 முதல் 30 வரை ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ என்ற ஸ்பெஷல் திரைப்பட விழாவை ஸ்ட்ரீம் செய்து அதிரடி காட்டி வருகிறது.
ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்ட்டில் இருக்கும் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஒரே இடத்தில் கொண்டு வந்து லாலேட்டன் ரசிகர்களுக்கு செம விருந்து படைத்துள்ளது. த்ரிஷ்யம், மணிச்சித்திரதாழு, வானபிரஸ்தம், பாரதம், சன்மனசுள்ளவர்கு சமாதானம், புலிமுருகன், தூவனதும்பிகள், நேரு, செங்கோல், காலாபாணி, கிரீடம், கிலுக்கம் முதல் எல்2: எம்புரான், பரோஸ் – கார்டியன் ஆஃப் டிரெஷர் வரை மோகன்லாலின் கேரியரையே மாற்றிப்போட்ட டாப் டக்கர் படங்கள் அனைத்தும் இதில் ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன.
சும்மா படம் மட்டும் பார்த்தால் போதாது என்று, ரசிகர்களை குஷிப்படுத்த ‘மோகன்லால் கல்ட் கிளாசிக்ஸ்’, ‘தி கம்ப்ளீட் லாலேட்டன் ஸ்வாக்’, ‘லாலேட்டன் எல்ஓஎல் யுனிவர்ஸ்’, ‘பெஸ்ட் மோகன்லால் திரில்லர்’ என வெரைட்டியான பிளேலிஸ்ட்களையும் பிரித்து மாஸ் காட்டியிருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் மேலாக, மோகன்லால் சூப்பர் ஃபேன்ஸ் நெஞ்சில் பாலை வார்க்கும் விதமாக ஒரு வெறித்தனமான போட்டியையும் ஜியோஹாட்ஸ்டார் நடத்துகிறது. மோகன்லாலின் ஐகானிக் படங்கள் பற்றிய கேள்விகளுக்குச் சரியான பதில்களைத் தட்டிவிட்டு, அவரே கைப்பட கையெழுத்திட்ட பிரத்யேக டி-ஷர்ட்டுகளை தட்டிச்செல்லும் பம்பர் சான்ஸ் ரசிகர்களுக்குக் காத்துள்ளது. இந்தப் போட்டி பற்றிய அத்தனை விபரங்களும் ஜியோஹாட்ஸ்டாரின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் செம விபரமாகப் பப்ளிஷ் செய்யப்பட்டுள்ளது.
தலைமுறைகள் தாண்டி, மொழிகள் கடந்து இந்திய திரையுலகையே தன் அசாத்திய நடிப்பால் கட்டிப்போட்டு வைத்திருக்கும் மோகன்லாலின் இந்த பர்த்டே திருவிழாவை ஜியோஹாட்ஸ்டாரில் பார்த்து என்ஜாய் பண்ணுங்க பாஸ்!

