‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’: பூரி ஜெகன்நாத்துக்கு விஜய் சேதுபதி பாராட்டு!
திரையுலகில் 26 ஆண்டுகளைக் கடப்பது என்பது சாதாரண சாதனையல்ல; அது ஒரு சகாப்தம்! பவர் ஸ்டார் பவன் கல்யாணின் ‘பத்ரி’ மூலம் அதிரடியாகத் தன் பயணத்தைத் தொடங்கிய இயக்குநர் பூரி ஜெகன்நாத், இன்று வெற்றிகரமான 26 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்தச் சிறப்புத் தருணத்தை, அவர் தற்போது இயக்கி வரும் “ஸ்லம் டாக்” படத்தின் நாயகன் விஜய் சேதுபதியின் மனமார்ந்த வாழ்த்துகள் இன்னும் அழகாக்கியுள்ளன.
விஜய் சேதுபதியின் நெகிழ்ச்சியான பாராட்டு
தன்னுடைய தனித்துவமான பாணியால் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த பூரி ஜெகன்நாத் குறித்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்:
“26 ஆண்டுகள் என்பது ஒரு மைல்கல் மட்டுமல்ல; அது தைரியம் மற்றும் அஞ்சாத குரலால் செதுக்கப்பட்ட ஒரு மரபு. ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ படத்தில் உங்களுடன் பணியாற்றியது பெரும் மகிழ்ச்சி. நடிகர்களைத் தங்களின் சவுகரியமான எல்லையைத் (Comfort Zone) தாண்டிச் செயல்பட வைப்பதில் நீங்கள் கில்லாடி!”
அதிரடி காட்டும் “ஸ்லம் டாக்”
Puri Connects மற்றும் JB Mohan Pictures இணைந்து தயாரிக்கும் இந்தப் படம், “33 டெம்பிள் ரோடு” என்ற மிரட்டலான டேக் லைனுடன் உருவாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன.
-
நட்சத்திரப் பட்டாளம்: விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்க, தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் மிரட்ட இருக்கிறார்கள். இவர்களுடன் பிரம்மாஜி மற்றும் VTV கணேஷ் ஆகியோரும் கைகோர்த்துள்ளனர்.
-
இசை அதிரடி: ‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ படங்களின் மூலம் அதிரடி இசையைத் தந்த தேசிய விருது கலைஞர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இந்தப் படத்திற்கு உயிர் கொடுக்கிறார்.
விரைவில் உலகளாவிய ரிலீஸ்!
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக “ஸ்லம் டாக்” வெளியாகத் தயாராகி வருகிறது. தமிழகத் தேர்தல் களம் சூடு தணிந்த பிறகு, படத்தின் பிரம்மாண்ட புரமோஷன் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
அச்சமற்ற இயக்குநரும், அசாத்திய நடிகரும் இணைந்திருக்கும் இந்த ஆக்சன் திரில்லர், இந்தியத் திரையுலகில் புதிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது!
