சாம் சி.எஸ்., ஹாலிவுட் தர இசையோடு இணையும் இதிகாசம்… “மகா அவதார் பரசுராம்”!

சாம் சி.எஸ்., ஹாலிவுட் தர  இசையோடு இணையும் இதிகாசம்… “மகா அவதார் பரசுராம்”!

பின்னணி இசையில் மிரட்டும் சாம் சி.எஸ்., இப்போது “மகா அவதார் பரசுராம்” படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு புதிய மேஜிக்கைச் செய்துள்ளார்.

“மகாவாதார் நரசிம்மா” தந்த அதிரடி வெற்றிக்குப் பிறகு, அதே யூனிவர்ஸில் உருவாகும் இந்தப் படம், இசை ரசிகர்களுக்கு ஒரு செம ட்ரீட்டாக அமையப்போகிறது.

மியூசிக்-ஃபர்ஸ்ட்: ஒரு புதுப்புரட்சி!

வழக்கமாக படம் எடுத்த பிறகுதான் இசை அமைப்பார்கள். ஆனால், இங்கே கதைக்கு முன்பே இசையமைத்து முடித்துவிட்டார் சாம் சி.எஸ். அந்த இசையின் தாளத்திற்கேற்ப அனிமேஷன் காட்சிகளை வடிவமைக்கும் “Music-first” பாணியை கையாண்டுள்ளனர். இது இந்திய சினிமாவில் மிக அரிதான, அதேசமயம் பிரம்மாண்டமான முயற்சி!

சர்வதேச தரம் – ஹாலிவுட் டச்!

  • மெகா டீம்: 250-க்கும் மேற்பட்ட சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் ஹாலிவுட் இசைக் கலைஞர்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

  • சவுண்ட் மேஜிக்: பிரம்மாண்டமான ஆர்கெஸ்ட்ரேஷன் மற்றும் ஆழமான சவுண்ட் லேயரிங் மூலம் உலகத் தரத்திலான ஒரு விஷுவல் அனுபவத்தை சாம் சி.எஸ். செதுக்கி வருகிறார்.

பிஸியான சாம் சி.எஸ். – அடுத்தடுத்த அதிரடிகள்!

வெறும் பின்னணி இசை மட்டுமின்றி, பாடல்களிலும் ஹிட் அடித்து வரும் சாம் சி.எஸ்., இப்போது இந்தியாவின் பல மொழிகளிலும் ‘மோஸ்ட் வாண்டட்’ இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார். இவரது கைவசம்:

  • கார்த்தியின் சர்தார் 2

  • புஷ்கர் – காயத்ரியின் அடுத்த படைப்பு

  • ரவிமோகனின் கராத்தே பாபு

  • விரைவில் தனுஷ் மற்றும் இயக்குநர் எச். வினோத் உடனும் கூட்டணி!

அனிமேஷன் மற்றும் இசை சங்கமிக்கும் இந்தப் புதிய சினிமா அனுபவம், இந்தியத் திரையுலகில் சாம் சி.எஸ். -ன் மகுடத்தில் மற்றொரு வைரக்கல்லாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை!

Related Posts