திட்டக்குடியில் ‘TN 2026’ திருவிழா! மீண்டும் மெகா ஹிட் அடித்த கண்ணன் ரவி & தீபக் ரவி!

திட்டக்குடியில் ‘TN 2026’ திருவிழா! மீண்டும் மெகா ஹிட் அடித்த கண்ணன் ரவி & தீபக் ரவி!

ரமான கதைகளைத் தேர்வு செய்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தயாரிப்பாளர்களாக உருவெடுத்துள்ள கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி, ‘KRG Kannan Ravi Group’ சார்பில் மீண்டும் ஒரு அதிரடி வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். இயக்குநர் உமாபதி ராமையா இயக்கத்தில், நடிகர் நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் “TN 2026” திரைப்படம், அரசியல் பகடியும் சமூக கருத்துகளும் கலந்த கமர்ஷியல் விருந்தாக ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ளது.

ஏப்ரல் 10-ம் தேதி உலகமெங்கும் வெளியான இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் சொந்த ஊரான திட்டக்குடியில் நடைபெற்ற கொண்டாட்டம் ஒட்டுமொத்த ஊரையே அதிர வைத்துள்ளது. திரையரங்கிற்கு நேரில் வந்த இயக்குநர் உமாபதி ராமையா, நட்டி, தம்பி ராமையா, சிருத்தா ராவ் மற்றும் இளவரசு ஆகியோரை மேளதாளம், வாணவேடிக்கை என ஊர்வலமாக அழைத்துச் சென்று பொதுமக்கள் தங்களது அன்பை மழையாகப் பொழிந்தனர்.

“தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தற்போது “TN 2026” படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை நோக்கிப் பாயும் இந்தக் கூட்டணி, அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் “டெக்ஸ்லா” படத்தையும் தயாரித்து வருகிறது. மொத்தத்தில், வித்யாசமான தேர்வுகள் மூலம் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தமிழ் திரையுலகின் வெற்றிகரமான தயாரிப்பாளர்களாக மிரட்டி வருகின்றனர்!

Related Posts