வெட்டப்பட்ட தலையாக விஜய் சேதுபதி! ‘முத்து என்கிற காட்டான்’ ஓ.டி.டி. தொடரில் அதிர்ச்சி!

வெட்டப்பட்ட தலையாக விஜய் சேதுபதி! ‘முத்து என்கிற காட்டான்’ ஓ.டி.டி. தொடரில் அதிர்ச்சி!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில், ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகவிருக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் அதிரடியாக நடைபெற்றது. தேசிய விருது பெற்ற இயக்குநர் மணிகண்டன் மற்றும் பி. அஜித் குமார் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த சீரிஸ் மீதான எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.

இந்த விழாவில் படக்குழுவினர் பகிர்ந்துகொண்ட சுவாரசியமான விஷயங்கள்:


கிருஷ்ணன் குட்டி (ஜியோ ஹாட் ஸ்டார் தென்னிந்தியத் தலைவர்)

“கடந்த மூணு வருஷத்துல 40 ஷோக்களைப் பார்த்திருக்கேன், ஆனா இந்த ‘முத்து என்கிற காட்டான்’ ரொம்ப ஸ்பெஷல்! கதையோட முதல் எபிசோட்லயே ஹீரோவோட தலை மட்டும் தான் வரும், இதுவே ஒரு செம ட்விஸ்ட். விஜய் சேதுபதி கூட பிக் பாஸ்ல வொர்க் பண்ணோம், இப்போ அவரோட புரொடக்ஷன் கூட கை கோர்த்திருக்கிறது ரொம்ப சந்தோஷம். இந்த சீரிஸ் கண்டிப்பா எல்லை தாண்டி ஹிட் அடிக்கும்!”

பிரதீப் (ஜியோ ஹாட் ஸ்டார் மூத்த துணைத் தலைவர்)

“நாங்க இதுவரை பண்ணதுலயே இதுதான் மெகா பட்ஜெட் ப்ராஜெக்ட். நடுவுல கொஞ்சம் தடங்கல் வந்தப்போ, விஜய் சேதுபதி சார் கிட்ட பேசினேன். உடனே அவர், ‘நானே தயாரிக்கிறேன்’னு சொல்லி நின்னார் பாருங்க.. அதுதான் மாஸ்! இந்தியாவிலேயே வேற எந்த ஸ்டார் ஹீரோவும் வெட்டப்பட்ட தலையா நடிக்க ஒத்துக்க மாட்டாங்க, அந்தத் தைரியம் நம்ம மக்கள் செல்வனுக்கு மட்டும்தான் உண்டு!”

பி. அஜித் குமார் (இயக்குநர் – படத்தொகுப்பாளர்)

“எடிட்டரா ஆரம்பிச்ச என் பயணம், இப்போ இயக்குநரா இங்க நிக்குது. மணிகண்டனோட அந்த அட்டகாசமான ஐடியாவைச் செதுக்கி, இன்னைக்கு ஒரு தரமான படைப்பா கொண்டு வந்திருக்கோம். சின்ன கேரக்டர்ல நடிச்சவங்க கூட தங்களோட முழு உழைப்பையும் கொடுத்திருக்காங்க. எல்லாருக்கும் பிடிச்ச ஒரு சீரிஸா இது இருக்கும்!”

மிலிந்த் சோமன்  

“தமிழ்ல நான் நடிக்கிற முதல் வெப் சீரிஸ் இதுதான். கதையோட ஆரம்பமே ஒரு டாப் ஹீரோவோட வெட்டப்பட்ட தலையில இருந்து ஆரம்பிக்குதுன்னதும் எனக்கு ஆச்சரியமா இருந்தது. மணிகண்டன் சார் என் மேல நம்பிக்கை வச்சு கொடுத்த இந்த கேரக்டருக்காக அவருக்கு ஒரு பெரிய தேங்க்ஸ்!”


சண்முகசுந்தரம் (ஒளிப்பதிவாளர்)

“விஜய் சேதுபதி கூட ‘ஆண்டவன் கட்டளை’, ’96’ படங்களுக்கு அப்புறம் இது மூணாவது படம். அந்த ரெண்டும் சூப்பர் ஹிட், இதுவும் கண்டிப்பா ஹிட்தான்! இதுல விஜய் சேதுபதியோட ஆக்ஷன் காட்சிகள் மிரட்டலா இருக்கும். மணிகண்டனோட அந்த ‘வின்ட்’ குறும்படத்தைப் பார்த்து மிரண்டு போயிருக்கேன், அதே மேஜிக் இதுலயும் நடக்கும்!”

ராஜேஷ் முருகேசன் (இசையமைப்பாளர்)

“விஜய் சேதுபதி சாருக்கு நான் பெரிய ஃபேன். இதுல இருக்குற ஒரு பாட்டுக்கு மெட்டு போட்டதே அவர்தான்! ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் எதேச்சையா முணுமுணுத்த அந்த மெட்டை வச்சுதான் ஒரு பாட்டையே ரெடி பண்ணோம். ஒவ்வொரு அத்தியாயமும் செம த்ரில்லிங்கா இருக்கும்!”

ஆர். ராஜ்குமார் (கதாசிரியர்)

“இது மணிகண்டனோட அப்பாவோட வாழ்க்கையில நடந்த ஒரு உண்மைச் சம்பவம். ‘தலை கிடைச்சிருச்சு, முண்டம் எங்கே?’னு ஆரம்பிச்சு, ஒரு பெரிய தேடலா இந்தத் திரைக்கதையை மாசக்கணக்கா விவாதிச்சு உருவாக்கினோம். விஜய் சேதுபதி இந்த ஸ்கிரிப்ட்டை நம்பி உள்ள வந்ததுதான் இந்தத் தொடரோட பலமே!”

 வி ஜே பார்வதி & அபி நட்சத்திரா

“லலிதாங்கிற மதுரைப் பொண்ணு கேரக்டர்ல மேக்கப் இல்லாம நடிச்சது ஒரு வரப்பிரசாதம்” என நெகிழ்ந்தார் பார்வதி. “துறுதுறுன்னு இருக்குற ‘சிட்டு’ கேரக்டர்ல நடிச்சிருக்கேன், விஜய் சேதுபதி சார் கொடுத்த மோட்டிவேஷன் மறக்க முடியாது” என உற்சாகமாகப் பேசினார் அபி நட்சத்திரா.

.மக்கள் செல்வன் விஜய் சேதுபதி: “நம்பிக்கை கொடுத்த மனிதர்கள்!”

“இந்த சீரிஸ் ஆரம்பிச்சதுல இருந்து இப்போ வரை நடந்ததை வச்சே இன்னும் மூணு சீரிஸ் எடுக்கலாம்! என் மேல எனக்கே நம்பிக்கை இல்லாத நேரத்துல, மத்தவங்க என் மேல வச்ச நம்பிக்கைதான் என்னை இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. மணிகண்டனோட அந்த அறிவு, ஒவ்வொரு விஷயத்தையும் அவர் பார்க்குற கோணம் என்னை எப்பவும் ஆச்சரியப்படுத்தும். ஜியோ ஹாட் ஸ்டார் என்னைத் தேடி வந்து பிக் பாஸ் வாய்ப்பு கொடுத்தப்போ கூட நான் தயங்கினேன், ஆனா அவங்க என் மேல வச்ச நம்பிக்கை பெருசு. மார்ச் 27 முதல் ‘முத்து என்கிற காட்டான்’ உங்க முன்னாடி வருது.. பார்த்துட்டு சொல்லுங்க!”

“உண்மையைச் சொல்லப்போனால், பல நேரங்களில் என் மீது எனக்கே பெரிய நம்பிக்கை இருந்ததில்லை. ஏதோ ஒரு வேலையைச் செய்து முடித்த பிறகு, அதை மற்றவர்கள் பார்த்துவிட்டு ‘நல்லா இருக்கு’ என்று சொல்லும்போதுதான் ‘ஓ… இதை நம்மால் செய்ய முடியுமா?’ என்றே எனக்குத் தெரியும். ஆனால், நான் என்னை நம்புவதற்கு முன்பே என் மீது அதீத நம்பிக்கை வைத்த மனிதர்கள் என் வாழ்க்கையில் அதிகம். பிரதீப் (ஜியோ ஹாட் ஸ்டார்), மணிகண்டன் போன்ற நண்பர்கள் என் மீது வைத்த அந்த நம்பிக்கைதான் என்னை முன்னால் அழைத்துச் சென்றிருக்கிறது.”

“ஒருநாள் பிரதீப் என் அலுவலகத்திற்கு வந்து சோபாவில் சாய்ந்து அமர்ந்தார். என்னையும் சாய்ந்து அமரச் சொல்லிவிட்டு, ‘நான் ஒன்று கேட்பேன், மறுக்கக் கூடாது’ என்றார். ஏதோ ‘மேரேஜ் ப்ரோபோசல்’ (Marriage Proposal) பண்ணப்போகிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் ‘பிக் பாஸ்’ தொகுத்து வழங்கக் கேட்டார். எனக்கு அதைப் பற்றி எதுவுமே தெரியாது, பார்த்தது கூட கிடையாது என்று சொல்லியும் அவர் விடவில்லை. என் மீது அவர் வைத்த அந்த பிடிவாதமான நம்பிக்கைதான் இன்று என்னை இங்கே நிறுத்தியிருக்கிறது.”

“2008-லிருந்து மணிகண்டனை எனக்குத் தெரியும். ஒரு விஷயத்தை அவர் பார்க்கும் கோணம், அவர் நடிகர்களிடம் வேலை வாங்கும் விதம் எல்லாமே ஆச்சரியமாக இருக்கும். அவர் எழுதும் ஒவ்வொரு வரியும் சுவாரசியமானது. ஒரு காட்சி முடிந்து வெளியே வந்த பிறகுதான், அந்தக் காட்சிக்குள் அவர் இவ்வளவு விஷயங்களை யோசித்து வைத்திருக்கிறாரா என்பது புரியும். அவர் ஒரு மிகச்சிறந்த படைப்பாளி.”

 “மணிகண்டனால் தொடர்ந்து பணியாற்ற முடியாத ஒரு சூழல் வந்தபோது, எடிட்டராக இருந்த அஜித்குமார் மிகத் தெளிவாக இந்தத் தொடரைத் தன் கையில் எடுத்து முடித்துக் கொடுத்தார். அவருக்கு உதவியாக இருக்க ‘உடன் பால்’ பட இயக்குநர் கார்த்திக்கை அழைத்தேன். என் அழைப்பை ஏற்று அவரும் வந்து பணியாற்றினார். இப்படிப் பலரின் கூட்டு உழைப்புதான் இந்த ‘முத்து என்கிற காட்டான்’.”

Related Posts