ஜி.வி.பிரகாஷின் ‘லக்கி’: பிப்., 20 முதல் JioHotstar-ல் நேரடி ரிலீஸ்!
ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கும் அதிரடி திரைப்படமான ‘லக்கி’ ம் JioHotstar தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
ஒரு சாதாரண நாய்க்குட்டி, அதிகார மையங்களின் அசைக்க முடியாத சாம்ராஜ்யத்திற்குள் நுழையும்போது ஏற்படும் அதிரடித் திருப்பங்களே இந்தத் திரைப்படத்தின் மையக்கரு. உதய் மகேஷ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் அனஸ்வரா ராஜன் கூட்டணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம், நகைச்சுவையும் உணர்ச்சிகளும் கலந்த ஒரு முழுமையான குடும்ப விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.
ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணைந்த மாபெரும் தளமான JioHotstar-ன் ‘சவுத் அன்பவுண்ட்’ நிகழ்வில், ‘லக்கி’ திரைப்படத்தின் பிரம்மாண்ட உலகம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகாரத்திற்கும் அப்பாவித்தனத்திற்கும் இடையே நடக்கும் இந்த சுவாரசியமான போரில், நடிகை தேவதர்ஷினியும் ஒரு முக்கியப் பங்கினை ஏற்றுள்ளார். அரசியலும் ஆக்ஷனும் பின்னிப் பிணைந்திருந்தாலும், மனதைத் தொடும் குடும்பத் தருணங்களுக்கு இப்படத்தில் பஞ்சமிருக்காது. செல்லப்பிராணி பிரியர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் கட்டிப்போடும் வகையில் அமைந்துள்ள ‘லக்கி’, பிப்ரவரி 20 முதல் உங்கள் திரைகளில் உற்சாகத்தை அள்ளித் தெளிக்கக் காத்திருக்கிறது!

