பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’.. சன் நெக்ஸ்ட் ஓடிடியில்!
பார்வதி நாயர் நடித்துள்ள ‘உன் பார்வையில்’ திரைப்படம் வரும் டிசம்பர் 19-ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்வதி நாயர் நடித்துள்ள ‘உன் பார்வையில்’ திரைப்படம் வரும் டிசம்பர் 19-ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக அழுத்தமிக்க உணர்ச்சிகரமான பாத்திரத்தில், நடிகை பார்வதி நாயர் நடித்துள்ளார். கணவர் மற்றும் இரட்டை சகோதரியின் மர்மமான திடீர் மரணங்களைத் தொடர்ந்து, உண்மையை தேடும் அவரது பயணம், ரகசியங்களும் திருப்பங்களும் நிரம்பிய ஒரு மர்ம உலகுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.
தன்னுடைய வலுவான நடிப்பால் படத்தை முழுவதுமாக தாங்கிச் செல்லும் பார்வதி நாயரின் நடிப்பு, படத்திற்குப் பெரும் பலம். திரைக்கதையின் மர்ம மரணங்களின் விசாரணை பக்கத்தில், முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் கதாப்பாத்திரத்தில் மகேந்திரன் நடித்துள்ளார்.