‘மாமரம்’: திரை விமர்சனம்: சுவையான கனி!
காதலும், காதல் சார்ந்த கதையும் என நெகிழ வைக்கிறது மாமரம்.
காதலி செய்த துரோகம் செய்துவிட… காதலையும், காதலர்களையும் வெறுக்கிறார் நாயகன் ஜெய் ஆகாஷ். ஆனால், அந்த காதலி சொன்னதால் ஒரு மாமரத்தை தனது காதல் நினைவாக பாதுகாத்து வளர்க்கிறார். அந்த மாமரம்தான் அவர் உயிர்.
துரோகம் செய்த காதலியின் ஒரு சொல்லை வேதவாக்காக மதிக்க காரணம் என்ன அதன் பிறகு நடந்தது என்ன என்பதை ரசிக்கத் தக்க முறையில் அளிப்பதுதான் மாமரம்.
படத்தின் ஆணி வேர் ஜெய் ஆகாஷ்தான். தயாரித்து இயக்கியதோடு அற்புதமாக நடிக்கவும் செய்திருக்கிறார். இளம் வயது, முதிய வயது, மன நலம் பாதிக்கப்பட்டது போன்ற நிலை என மூன்று தோற்றங்களில் அசத்துகிறார். காதலி மீது செலுத்தும் பாசம், ஏமாற்றத்தில் துவளவும் சோகம் என சிறந்த நடிப்பை அளித்து இருக்கிறார்.
நாயகிகள் மீனாட்சி, சந்தியா இருவரும் அழகாக இருக்கிறார்கள்.. சிறப்பாக நடிக்கிறார்கள்.
காதல் சுகுமார், கே.பி.ஒய் திவாகர், ராகுல் தேவ், பிரம்மாஜி, அருணாச்சலம், மதுரை சக்திவேல், பிரம்மானந்தம், பாஷா, சத்யம் ராஜேஷ், ரம்யா என தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் ஏராளமானோர் இருப்பதும், அவர்களை சரியாகப் பயன்படுத்தி இருப்பதும் படத்துக்கு பலம்.
பவுல் பாண்டியின் ஒளிப்பதிவு, நந்தாவின் இசை, ஜெய் ஹரிஷாந்தின் பின்னணி இசை, ஏ.சி.மணிகண்டனின் படத்தொகுப்பு அனைத்தும் சிறப்பு. தனது கதைக்கேற்ப இவற்றை வாங்கிய இயக்குநர் ஜெய் ஆகாஷ் பாராட்டுக்கு உரியவர்.
மொத்தத்தில், ‘மாமரம்’ .. அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 3.5/5
