காங்கிரஸ் எதிர்த்த ‘வீரவணக்கம்’: வெளியீட்டு தேதி அறிவிப்பு!

காங்கிரஸ் எதிர்த்த ‘வீரவணக்கம்’: வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சுதந்திரத்துக்கு முந்தை காலத்தில், கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டி எழுப்பியவர் பி.கிருஷ்ண பிள்ளை. அம்மாநிலத்தின் முதல் கம்யூனிஸ்ட் என்று போற்றப்படுகிறார்.

இவரது  வரலாறு ‘வசந்தத்தின்டே கனல் வழிகளில்’  என்கிற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக வெளியானது.   2014ல் வெளியான இப்படத்தை  அனில் வி.நாகேந்திரன் இயக்கி இருந்தார். சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.

அது தேர்தல் காலம். “இந்த ‘வசந்தத்தின்டே கனல் வழிகள்’ கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக உள்ளதால், அப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என கேரள காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தது.   இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 11 வருடங்கள் கழித்து, ‘வசந்தத்தின்டே கனல் வழிகள்’ படத்தின் இரண்டாம் பாகமாக, வீரவணக்கம் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதையும் அனில் வி.நாகேந்திரன் இயக்க,  சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.

ஆகவே படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

படம் குறித்து இயக்குநர் அனில் வி.நாகேந்திரன், “தற்போது உருவாகி இருக்கும் வீரவணக்கம் திரைப்படத்தை,  ‘வசந்தத்தின்டே கனல் வழிகளில்’ தொடர்ச்சி என்றும் கூறலாம்.  ஆனால் இது பி.கிருஷ்ணபிள்ளையின் வாழ்க்கை வரலாறு அல்ல.  தமிழ்நாட்டில் இருந்து கேரளத்துக்கு வருகிறான். இங்கே,  பி.கிருஷ்ணபிள்ளையின் புரட்சிகர வாழ்க்கை அவனுக்குள் உத்வேகத்தை ஏற்படுத்துகிறது.  அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே வீரவணக்கம் படத்தின் கதை” என்றார்.

மேலும், “இந்தப் படத்திலும் சமுத்திரகனி, கிருஷ்ணபிள்ளையாகவே வருகிறார்.  சுதந்திரப்போரில் ஈடுபட்டு, அவருடன் சிறையில் ஒன்றாக அடைக்கப்பட்டு இருந்த வேலாயுதம் என்ற கம்யூனிஸ்ட் தலைவரின் பேரனாக பரத் வருகிறார்.  இவர்க ளுடன் 95ஆம் அகவையில் இருக்கும் முதுபெரும் புரட்சிப் பாடகி பி.கே.மேதினியும்  முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்” என்றார் இயக்குநர்  அனில் வி. நாகேந்திரன்.

தற்போது இப்படம், ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Posts