340 க்கும் மேற்பட்ட  யுபிஎஸ்சி மாணவர்களுக்கு மனிதநேயம் வழங்கிய ஊக்கத்தொகை…

340 க்கும் மேற்பட்ட  யுபிஎஸ்சி மாணவர்களுக்கு மனிதநேயம் வழங்கிய ஊக்கத்தொகை…

சென்னை:பெருநகர மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின், ‘மனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்தில்   யுபிஎஸ்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளையின் சார்பில் அங்கு படிக்கும் மாணவர்களில்  UPSC முதன்மை தேர்வு எழுத இருக்கும் 340-க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்ற 340-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் பங்கு பெற்று உதவித் தொகையை பெற்றுக் கொண்டனர். இந்த தொகையை  ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி அலெக்சாண்டர் மற்றும் ஏழைகளின் கல்வி தந்தை திரு. சைதை துரைசாமி அவர்கள் வழங்கினார்கள்.

இருவரும் தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடி முதன்மைத் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள ஊக்கமளித்தனர்.

குறிப்பாக தேர்வு நேரத்தில் தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய நேர மேலாண்மை, உடல்நலம் மற்றும் மனநலம் பேணுதல் போன்ற அவசியமான  தகவல்களை மனித நேயர் சைதை துரைசாமி தேர்வு எழுதும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

 

Related Posts