தமிழகத்தில் வெங்காயம் விலை எப்போது குறையும்?

சென்னை; வெங்காயம் விலையான தற்போது நடுத்தர மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டு வருகின்றன. இதனால் அரசு அங்காடிகளில் மிகக் குறைவான விலைக்கு  வெங்காயம் விற்பனையை அறிமுகம் செய்துள்ளது தமிழக அரசு.

வெளிமாநிலமான மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வெங்காயத்தின் அளவு மழையின் காரணமாக குறைந்துள்ளதால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக கோயம்பேடு வெங்காய வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மஹாராஷ்டிராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வெங்காயத்தின் அளவு பத்து சதவீதமாக குறைந்து விட்டதாக கூறுகிறனர் கோயம்பேடு வியாபாரிகள்.

”தினமும் கோயம்பேடு சந்தைக்கு வரும் சுமார் 40 லாரிகளில் வரும் வெங்காயத்தின் அளவு தற்போது அதன் எண்ணிக்கை 20-ஆக குறைந்துள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். கர்நாடகாவில் அதிக மழை பெய்துவருவதால் அங்கிருந்து வரும் வெங்காயம் அழுகிவிடுவாதால் சாதியம் இல்லை.

மொத்த சந்தையில் 50 கிலோ வெங்காய மூட்டை விலையானது தற்போது ரூ.4,300ஆக இருந்து வருகிறது. அது நுகர்வோர் கையில் கிடைக்கும் போது ஒரு கிலோ ரூ.85 இருந்து  ரூ.120 வரை விற்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். இன்னும் பத்து நாள்களுக்கு வெங்காயத்தின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்கின்றனர் வியாபாரிகள்.

தற்போது மழையின் காரணமாக வெங்காயம் மட்டும் ஏற்றத்தில் இல்லை’ அனைத்து காய்கறியின் விலையிலும் ஏற்றாம் கண்டுள்ளது. இந்த விலையானது தீபாவளி முடிந்த பின்னரே குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.

எகிப்து நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டாலும் அது நுகர்வோர் கையில் கிடைக்கும் போது விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இந்த விலை ஏற்றமானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகுதான் அதிகரிக்க தொடங்கியது.  அதன் தொடர்ச்சியாக அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த வெங்காயம் தற்போது மீண்டும் உச்சத்தில் இருக்கிறது.மழையின் காரணமாக வரத்து குறைந்துள்ளதால் இப்போது விலை குறைவதற்கான வாய்ப்பு இல்லை என்றே கூறுகின்றனர் வியாபாரிகள்.

மொத்த வியாபாரிகளிடம்  இருந்து வாங்கும்  சின்ன சின்ன வியாபாரிகள் சில்லறை கடைகளுக்கு சென்று சேர்க்கும்போது விலை அதிகரிப்பதை தவிர்க்கமுடியாது என்கின்றனர்.  மேலும் கொரோனா தொற்று காரணமாக  கோயம்பேடு மூடப்பட்டு பின் தற்போது திறந்தாலும் காய்கறி சந்தையில் இயங்கிவந்த சுமார் 1,900 கடைகளில் தற்போது வெறும் 200 கடைகள் மட்டுமே இயங்கிவருகிறது.

ஆகவே ”கடைகளின் எண்ணிக்கை கூட்ட வேண்டும். அப்போது தான் சரக்குகள் மொத்த வியாபாரிகளிடம் இருந்து சிறுவணிகர்களுக்கு எளிமையாக கிடைக்கும் என்கின்றனர். மேலும் வெங்காயத்தின் விலை உயர்வு என்பது தற்போது வரும் பண்டிகை காலம் வரை இருக்கும் என்கின்றனர் வியாபாரிகள்.

விலையை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசின் அங்காடிகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால்’ வெங்காயத்தின் வரத்து குறைந்து இருப்பதால் ஒரு நபருக்கு இரண்டு கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

-யாழினி சோமு

Related Posts