மீண்டும் எஸ்கேப் ஆன சீமான்!

மீண்டும் எஸ்கேப் ஆன சீமான்!
பொது விவாதத்துக்கு விடுத்த சவாலை ஏற்பதாக திருமுருகன் காந்தி தெரிவித்த பிறகும் வழக்கம்போல  சீமான் மவுனம் காப்பது விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிட தலைவர்கள் குறித்து அவதூறு பேசுவதையும், பல்வேறு பொய்கள் கூறுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, தந்தை பெரியார் குறித்து பொய்யான – அவதூறான வார்த்தைகளைக் கூறினார்.
இதையடுத்து அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சீமானுக்கு கண்டனம் தெரிவித்தனர். சமூகவலைதளங்களில் சீமானுக்கு பலரும்  தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்த நிலையில், “பெரியார் குறித்து பொது விவாதத்துக்கு தயார்..” என்றுசீமான் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி விடுத்துள்ள அறிக்கை:
“சீமான்..
இருகரம் விரித்து விவாதத்திற்கு தயாராக இருப்பதாக பேட்டி கொடுத்து இருக்கிறீர்கள். மகிழ்ச்சி!
விவாதத்திற்கு தயாராக இருக்கிறேன் என 4 நாட்களுக்கு முன்பே சத்யம் தொலைக்காட்சி பேட்டியில் பகிரங்கமாக தெரிவித்துவிட்டேன்.
எங்கே, எப்போது,  சந்திக்கலாம் என இடம், தேதியை நீங்கள் முடிவுசெய்கிறீர்களா? அல்லது நான் குறிக்கவா?
உங்கள் மொழியில் சொல்வதாக இருந்தால், மானத்தமிழ்ப்பிள்ளையாக இருந்தால், விடுத்த சவாலை எதிர்கொள்ளும் துணிச்சல் இருக்குமென நினைக்கிறேன். நேரடியாக சந்திப்போம், விவாதிப்போம்” என்று தெரிவித்து உள்ளார்.
ஆனால் சீமான் தரப்பில் இருந்து இதற்கு பதில் இல்லை.
கடந்த வருடம், தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியின் கணவருடன் குத்துச்சண்டை போடப்போவதாக சீமான் அறிவித்தார். அதற்கான இடம், நேரம் குறித்து வீரலட்சுமி பொதுவெளியில் பதிந்தார்.
உடனே சீமான், “என்கூட மோத அவருக்கு தகுதி இல்லை” என்று வழக்கம்போல அசட்டுச்சிரிப்புடன் கடந்துவிட்டார்.
அதே போல இப்போதும், பின்வாங்கிவிட்டார் என்று சமூகவலைதளங்களில் பலரும் கருத்திட்டு வருகின்றனர்.

Related Posts