பச்சை பட்டாணியில் இவ்வளவு நன்மையா?
இந்த கொரோனா காலகட்டத்தில் தான் இயற்கையை நாம் தேடத் தொடங்கியுள்ளோம். ஆரோக்கியம் எங்கு கிடைக்கும் என்று தேடித் தேடி அலைத் தொடங்கிவிட்டோம் என்றே கூறலாம். உடல் ஆரோகியத்தை பேணுவது என்பது இந்த சூழ்நிலையில் சவாலான ஒன்று. மனித உடலுக்குத் தேவையான அனைத்தும் இயற்கை நமக்கு வாரிவழங்குகிறது. ஆனால் அதை நாம் உணர மறுக்கிறோம். அந்தந்த காலநிலைக்கேற்ப நம்மை மாற்றி வருகிறது மாறாத இயற்கை.
கால நிலைக்கு ஏற்ற உணவுகளை நாம் உண்டு வந்தாலே நோய் இல்லாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். அந்த வகையில் குளிர்காலங்களில் கிடைக்ககூடிய பச்சைபட்டாணியைத் தான் பார்க்கப்போகிறோம்.
குளிர்காலத்தில் அதிகமாக விளையக்கூடிய காய்கறிகளில் ஒன்று. இயற்கையின் அழகை மொத்தமாக வாரிக்கொண்ட பச்சைபட்டாணி சுவையாகவும், மென்மையாக இனிப்பாக இருக்கும்.
ஊட்டசத்துக்கள்;
பச்சை பட்டாணியில் போலிக் அமிலம், வைட்டமின் கே, வைட்டமின் சி நார்ச்சத்துகள், புரோட்டீன்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கும், கருவுற்ற பெண்கள் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது.
இதில் இருக்கும் நார்ச்சத்து உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது. கலோரி குறைவு என்பதால் சர்க்கரை நோயாளிகள், மற்றும் டயட் இருப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். அடிக்கடி பசி உணர்வு ஏற்படாமலும் நீண்ட நேரம் இன்சுலினை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு உதவுகிறது.
பட்டாணியில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் பைட்டோ நியூட்ரிஷன்களான ஆல்ஃபா கரோட்டீன், பீட்டா கரோட்டீன், கூமெஸ்ட்ரோல், கேட்டசின் மற்றும் எபிகாடெசின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
இளமையின் ரகசியம்;
பச்சை பட்டாணி முகச் சுருக்கம் வராமல் அழகை பாதுகாக்கிறது. அல்சைமர் நோய், [மூளைக்கோளாறு] ஆர்த்ரிட்ஸ், மூச்சுக் குழாய் அழற்சி, ஏற்படால் தடுக்கும் வல்லமை இதற்கு உண்டு. முதியவர்கள் எடுத்துக் கொள்வதால் அல்சைமர் நோய் வரும் வாய்ப்பு குறைவு.
எலும்புக்கு வலு சேர்க்கிறது பட்டாணி. இதில் இருக்கும் வைட்டமின் சி, வைட்டமின் கே, கால்சியம், மக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள். நமது உடலில் இருக்கும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
இதில் இருக்கும் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் வயிறு சம்பந்தமான பிரச்னைக்கு தீர்வாகவும், செரிமானத் தன்மையை அதிகரிக்கிறது.
மேலும் இது உடலில் கொழுப்பை தங்கவிடாமல் பாதுகாத்து புற்றுநோய்க்கு எதிராக செயல் படுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் சி’ முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் தோல் சம்பந்தமான பிரச்னையை தீர்த்து வயதாவதை தடுக்கிறது.
இயற்கையோடு ஒன்றினைந்து வாழ்ந்தால் நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். கொரோனா பெரும் தொற்று நம்மை சரிசெய்து கொள்ள இயற்கை நமக்கு கொடுக்கும் ஒரு வாய்ப்பு என்றே கூறவேண்டும். காலநிலைக்கு ஏற்ற உணவுகளை ஏற்று உடலை நோய் தொற்றில் இருந்து பாதுகாப்போம்.
-யாழினி சோமு

