“தில்லு இருந்தா போதும்!” : பாசக்கார ‘Brother ‘ ட்ரெய்லர்!

“தில்லு இருந்தா போதும்!” : பாசக்கார ‘Brother ‘ ட்ரெய்லர்!

தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. ‘ஜெயம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான ‘இறைவன், சைரன்’ திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிரதர்’. இந்த திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகியுள்ளது.

‘பிரதர்’ திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹாரில் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதற்கிடையில் படக்குழு புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அக்கா – தம்பி உறவை அடிப்படையாக கொண்டு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. ‘பிரதர்’ படத்துக்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்தநிலையில், தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

ட்ரைலர் எப்படி இருக்கு?

டிகிரி கூட முடிக்காத விளையாட்டு பிள்ளையாக இருக்கும் ஜெயம் ரவி அப்பாவின் டார்ச்சர் தாங்க முடியாமல் அக்கா பூமிகா வீட்டுக்கு வருகிறார். அவரால் அங்கு என்னென்ன குழப்பம் ஏற்படுகிறது என்பதுதான் படத்தின் கதை.

பேமிலி ஆடியன்ஸ் உட்பட அனைவரும் என்ஜாய் செய்து பார்க்கும் வகையில் தான் படம் இருக்கும் என இந்த வீடியோவை பார்க்கும் போது தெரிகிறது. ஜெயம் ரவியின் துள்ளலான டான்ஸ், நடிப்பு, காமெடி என அனைத்தும் வொர்க் அவுட் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதேபோல் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஏற்கனவே வெளிவந்த மக்காமிசி பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டது. தற்போது படத்தின் பிரமோஷன் சூடு பிடித்துள்ள நிலையில் தீபாவளி ரேசில் ஜெயம் ரவியும் கலக்குவார் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=rmonLZ1kElw