“கல்யாண சோக்குல படத்தை மறந்துட்டார், உமாபதி!”: ‘பித்தல மாத்தி’ தயாரிப்பாளர் சரவணன் ஆதங்கம்!

“கல்யாண சோக்குல படத்தை மறந்துட்டார், உமாபதி!”: ‘பித்தல மாத்தி’ தயாரிப்பாளர் சரவணன் ஆதங்கம்!

நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி ராமையாவக்கும் சமீபத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில், உமாபதி ராமையா நடித்த, பித்தல மாத்தி என்ற திரைப்படம் வெளியானது.

இது குறித்து பட தயாரிப்பாளர் சரவணன் கூறுகையில்,  ” மிகுந்த சிரமப்பட்டு படத்தை வெளியிட்டேன். ஆனா பட  பிரமோசன்களுக்கு நடிகர் உமாபதி வரவில்லை. அவர் திருமண சோக்கில் இருக்கிறார்.

எல்லோருமே என்னை பழி வாங்குகிறார்கள். கல்யாண சோக்கில் உமாபதி இருந்தாலும், படத்தில் நடித்த யாரும் படம் ரிலீஸ்க்கு வரவில்லை, திரையரங்கிற்கு வரவில்லை. ஒரு கிராமத்தில் ஒரு குடும்பத்தை மட்டும் ஒதுக்கி வைத்திருப்பார்கள். அதே போல் என்னை மட்டும் ஒதுக்கி வைத்து அவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். எதற்காக இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. கதாநாயகன் உமாபதி திருமணத்தில் பிஸியாக இருந்தாலும் ஒரு சின்ன வீடியோவா படத்திற்காக போட்டு இருக்கலாம். அவர் மட்டும் இல்லாமல் படத்தில் நடித்த நடிகர்கள் யாருமே படம் தொடர்பாக எந்த ஒரு வீடியோவோ, பதிவோ போடவில்லை, யாரிடமும் பேசவில்லை. இது ரொம்ப மன வருத்தத்தை கொடுக்கிறது” என்று தெரிவித்தார்.

 

Related Posts