5,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து..!
இந்த ஆண்டு நடக்க விருந்த 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 5 மற்று 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று மாநில பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்த நிலையில் இதற்கு பல தரப்பினர்களிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பொதுத் தேர்வு முறையை ரத்து செய்வதாக இன்று அறிவித்துள்ளது தமிழக அரசு.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “5 மற்றும் 8வது வகுப்பு மாணவர்களுக்கு 2019 – 2020 ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக 13.9.2019 அன்று பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டன. இந்த அறிகை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வந்தன.
அவற்றை மாண்புமிகு அம்மாவின் அரசு கவனமுடன் பரிசீலித்து, இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. எனவே, ஏற்கெனவே இருக்ககூடிய பழைய நடைமுறையே தொடரும் என்றும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.