ஜீ தமிழ் ‘சரிகமப சீனியர் 5’: அ.ப.ராசாவின் ப்ரமோ பாடல்!
பிரபல ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்த நிகழ்ச்சியில் ஜூனியர் லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி சமீபத்தில் தான் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்க உள்ளது.
இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஜீ தமிழ் வெளியிட்டு உள்ளது. இதற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டு இருக்கிறது.
நாளை (மே 24ஆம் தேதி) முதல் துவங்க இருக்கும் இந்த நிகழ்ச்சி வழக்கம் போல சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும். அதுபோல இந்த சீசனில் வழக்கம்போல அர்ச்சனாவே தொகுப்பாளினியாக களம் இறங்கி இருக்கிறார். நடுவர்களாக பாடகர் ஸ்ரீனிவாஸ், கார்த்திக் விஜய், பிரகாஷ் மற்றும் ஸ்வேதா மேனன் ஆகியோர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
“கனவுகள் கை சேருமோ..” என்ற இனிமையன ப்ரமோ பாடலை திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான அ.ப.ராசா எழுதி உள்ளார். சுதர்தன் எம்.குமார் இசை அமைக்க, சிந்தூரி பாடி உள்ளார்.
இது குறித்து கவிஞர் அ.ப.ராசா, “சரிகமப நிகழ்ச்சி இளம் – புதிய திறமையாளரகள் பலருக்கும் மேடை அமைத்துத் தருகிறது. மக்களிடம் பேராதரவைப் பெற்ற நிகழ்ச்சி. திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவது போலவே சவாலான வாய்ப்புதான். இந்த பிரமோ பாடலும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று இருப்பது மகிழ்ச்சிஅளிக்கிறது” என்றார்.
ஏற்கெனவே, வரவேற்பைப் பெற்றுள்ள சரிகமப நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை, இந்த ப்ரமோ பாடல் மேலும் எகிறவைத்து உள்ளது.

