“ பயங்கரமான ஆள்!”: ‘யூத்’ கென்ஸை வித்தியாசமாஸ் வாழ்த்திய தனுஷ்!

“ பயங்கரமான ஆள்!”: ‘யூத்’ கென்ஸை வித்தியாசமாஸ் வாழ்த்திய தனுஷ்!

பார்வதா என்டர்மெய்ன்மென்ட் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்கியுள்ள திரைப்படம் “யூத்”. வரும் மார்ச் 19-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் தனுஷ், கென் பற்றிப் பகிர்ந்துகொண்ட கிண்டலான கருத்துக்கள் அரங்கத்தையே சிரிப்பலையில் ஆழ்த்தியது.

தனுஷின் கலகல பேச்சு:

விழாவில் தனுஷ் பேசியதாவது:

“அசுரன் படப்பிடிப்பின் போது கென்னை முதன்முதலில் பார்த்தேன். அப்போது அவன் ரொம்ப அமைதியான பையன், சொன்னதை மட்டும் செய்வான் என்று நினைத்தேன். ஆனால் போகப்போகத்தான் தெரிந்தது, இவன் அப்பாவையே மிஞ்சிய ஆளாக இருக்கிறான் என்று!

இப்போது 23 வயதிலேயே ஒரு படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடித்திருக்கிறான். ‘படம் எடுக்கிறேன்’ என்று சொன்னபோது, நான் ‘இப்போ எதுக்கு அவசரம்?’ என்று தடுத்தேன். ஆனால், அவன் அதைத் தவறென்று நிரூபித்துக் காட்டியிருக்கிறான். இவன் தன்னுடைய கவனத்தை சிதறவிடாமல், வேலையில் இவ்வளவு தீவிரமாக இருப்பதைப் பார்த்தால், நிச்சயமாக இவன் அவங்க அப்பாவ விடப் பயங்கரமான ஆளா வருவான் போல என்று தோன்றுகிறது!” என்று சிரித்துக்கொண்டே கிண்டலாகப் பாராட்டினார்.

விழாவின் மற்ற முக்கியத் தகவல்கள்:

  • இயக்குநர் வெற்றிமாறன்: “கென் ஒரு மெட்டிக்குலஸான இயக்குநர். தனுஷ் கொடுத்த ஊக்கம்தான் அவனை இன்று இந்த உயரத்தில் நிறுத்தியுள்ளது.”

  • இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்: “கருணாஸ் அண்ணன் மீதுள்ள மரியாதையால்தான் இந்தப் படத்திற்குச் சம்பளம் வாங்காமல் இசையமைத்தேன். கென் ஒரு நல்ல ‘யூத்’ என்டர்டெய்னரைக் கொடுத்துள்ளார்.”

  • நடிகர் கருணாஸ்: “தனுஷ் இன்று ஒரு தேசிய விருது பெற்ற நடிகர் மட்டுமல்ல, கென்னுக்கு ஒரு பல்கலைக்கழகம் போல இருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்துள்ளார்.”

  • நடிகை நளினி & தேவதர்ஷினி: ஷூட்டிங் ஸ்பாட்டில் கென் ஒரு கண்டிப்பான இயக்குநராக வேலை வாங்கியதையும், நளினி அவர்களை மீண்டும் திரையில் அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி தெரிவித்தனர்.

படக்குழுவின் உழைப்பு:

தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் நாயகிகள் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ், அனிஷ்மா மற்றும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் கென் கருணாஸின் மேக்கிங் ஸ்டைல் மற்றும் கதையை விவரிக்கும் விதம் குறித்து வியந்து பேசினர்.


பள்ளிப் பருவத்தின் குறும்புகளையும், எனர்ஜியையும் பிரதிபலிக்கும் “யூத்” திரைப்படம் மார்ச் 19 முதல் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

Related Posts