லோக்கல் டைம்ஸ்: பழைய மை… புதிய பேனா!

லோக்கல் டைம்ஸ்: பழைய மை… புதிய பேனா!

மேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் ‘லோக்கல் டைம்ஸ்’  இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு பழைய காலத்து வார இதழைத் தாங்கிப் பிடிக்கப் போராடும் இளைஞர்களைப் பற்றிய கதை. பத்திரிகைத் துறையை ஒரு ‘நியூஸ்ரூம் டிராமா’வாகவும், அதே சமயம் ஜாலியான ‘பிரண்ட்ஷிப்’ கதையாகவும் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

 ஒன்லைன் என்ன?

தாத்தா விட்டுட்டுப் போன ‘நம்ம செய்தி’ பேப்பரை எப்படாச்சும் காப்பாத்தணும்னு களம் இறங்குறாங்க வீரா, அழகு சுந்தரம், ஸ்ரீவள்ளி மற்றும் முத்து. செய்திகளைத் தேடி ஓடுறதை விட, பேப்பர் நடத்தத் தேவையான பணத்துக்கும் விளம்பரத்துக்கும் அவங்க பண்ற ‘அக்கப்போர்’ தான் இந்த சீரிஸ்.

 பிளஸ் பாயிண்ட்ஸ்:

  • அந்த ‘லோக்கல்’ டச்: ஒரு சின்ன ஊர் பத்திரிகை அலுவலகம், அங்க இருக்குற சூழல் என எல்லாவற்றையும் இயக்குநர் நவீன் ஜார்ஜ் தாமஸ் ரொம்ப இயல்பா, ‘ஆதண்டிக்’காகக் காட்டியிருக்காரு.

  • துள்ளலான நடிப்பு: ரிஷிகாந்த், அப்துல் லீ கேங் கொடுக்குற எனர்ஜி சீரிஸைத் தொய்வில்லாமல் நகர்த்துது. இவங்களுக்கு நடுவுல இருக்குற அந்த நட்பு செம்ம ‘ரிலேட்டபிள்’.

  •  

 மைனஸ் பாயிண்ட்ஸ்:

  • பழைய மொக்கை ஜோக்குகள்: 2026-லும் 2000-வது காலத்து வடிவேலு காமெடி ரெஃபரன்ஸ்களையும், தேய்ந்து போன டயலாக்குகளையும் நம்பி திரைக்கதை அமைச்சது கொஞ்சம் ‘ஐ-ரோல்’ பண்ண வைக்குது.

  • வீணடிக்கப்பட்ட சீனியர்ஸ்: பாண்டியராஜன், சின்னி ஜெயந்த் என லெஜெண்ட்ஸ் இருந்தும் அவங்க கேரக்டர் ரொம்பவே வீக்காக இருக்கு. சும்மா ஓரங்கட்டி வச்ச மாதிரி ஒரு பீல்

  • மிஸ்ஸான விறுவிறுப்பு: ஒரு நியூஸ்ரூம்னாலே அந்த ‘பிரேக்கிங் நியூஸ்’ பதட்டம் இருக்கணும். ஆனா இங்க கதை ரொம்பவே நிதானமா, பழைய காலத்து வண்டியை ஓட்டுற மாதிரியே போகுது.

 ஃபைனல் பஞ்ச்: ‘லோக்கல் டைம்ஸ்’ – ஒருமுறை பார்க்கலாம். லட்சியம், நட்பு என சில நல்ல இடங்கள் இருந்தாலும், ஒரு அழுத்தமான பத்திரிகை துறைக் கதையைப் பார்க்க விரும்புபவர்களுக்கு இது ‘பிளாங்க் பேஜ்’ தான்!

Related Posts