திரௌபதி படத்தில் மறைக்கப்பட்ட தலைவர் யார்?

ருவேறுவித விமர்சனங்களைக் கடந்து, பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது, “திரௌபதி” திரைப்படம்.

அறிமுகமான, “பழைய வண்ணாரப்பேட்டை”, படத்திலேயே கவனதேதை ஈர்த்தவர் இயக்குனர் மோகன் ஜி. இவர் இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட் – ஷீலா இணைந்து நடித்துள்ள, “திரௌபதி” படம் தற்போது தமிழ்நாடு முழுதும் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

மோகன் ஜி

படத்தின் டீசர் வெளியானபோது, “இது சாதி வெறி படம்” என்றும், “இல்லையில்லை.. நாடகக்காதலை அம்பலப்படுத்தும் படம்” என்றும் இருவேறு கருத்துகள் பரபரப்பாக சமூகவலைதளத்தில் உலவின.

தற்போது வெளியாகி உள்ள இப்படத்தில், ஒரு காட்சியில், நாயகி ஷீலா, ஒரு படத்தை, மாணவி ஒருவருக்கு அன்பளிக்கிறார்.

ஆனால் அப்படத்தில் உள்ள உருவம் மறைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு, அப்படத்தில் உள்ளது யார் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து இயக்குனர் மோகன் ஜியிடம் கேட்டபோது, “அப்படத்தில் இருப்பது,  சேலத்து கவிச்சிங்கம் என போற்றப்படும் அர்த்தநாரீஸ்வர வர்மாதான் அவர். மகாகவி பாரதிக்கு இரங்கற்பா எழுதியவர்.  சுதந்திரபோராட்ட வீரர். தமிழில் முதல் நாளிதழான, “வீரபாரதி”யை வெளியிட்டவர்.

வன்னிய இனத்தவரான அவரை, அனைத்து சமுதாய மக்களும் போற்றினர். அவரது படத்தை ஏன் சென்சார் அதிகாரிகள் மறைக்கச் சொன்னார்கள் என்பது தெரியவில்லை,” என்றார்.

Related Posts