சுவிட்சர்லாந்தில் கிறிஸ்துமஸ் எப்படி இருக்கும்?

சுவிட்சர்லாந்தில் கிறிஸ்துமஸ் எப்படி இருக்கும்?

கிறிஸ்துமஸ் தினம், ஆண்டுதோறும் டிசம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது, இது இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கிறது மற்றும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும்.

கிறிஸ்தவர்களின் புனித பண்டிகையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சுவிட்சர்லாந்தில் எப்படி இருக்கிறது..?அங்கு குடியுரிமை பெற்று வாழும் தமிழ்நாட்டை சேர்ந்த  ஜெனிஃபர் டேவிட் விரிவாக கூறுகிறார்.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட  நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவள். அப்பா டேவிட் வங்கியில் பணிபுரிந்தவர்  என்பதால் அவருக்கு இடமாற்றம் அடிக்கடி இருந்து கொண்டே இருக்கும். பள்ளி பருவம் முதல் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை விடுதியில் தான் படித்து வளர்ந்தேன். உயர்கல்வி படுக்கும் வாய்ப்பு எனக்கு ஐஐடியில் கிடைத்தது.  அதன் மூலம் தான் இந்த வேளிநாட்டு வேலை.

படிப்பை முடித்த நான் 2013 ஆம் ஆண்டு வேலையின் காரணமாக ஸ்வீடன் வந்தேன். இந்த ஊர்  எனக்கு மிகவும் பிடித்து போனது.  2017 ஆம் ஆண்டு அந்த  நாட்டின் குடியுரிமை கிடைத்ததால் அப்படியே தங்கிவிட்டேன்.

சொர்க்க பூமியான இந்த ஸ்வீடன் எனக்கு இன்னொரு தாய் நாடுதான். இந்த நன்னாளில் ஸ்வீடன் கிறிஸ்மஸ் பற்றி சில தகவல்களை  உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களின்  புனித பண்டிகை. கிறிஸ்மஸ். கடந்த 386 ல் முதன் முதலாக கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. அமெரிக்காவின் டே என்ற பெண் தான் இயேசு பிறந்த  இந்த புனித நாளை கிறிஸ்துமஸ் என்று பெயர் சூட்டியதாக வரலாறு கூறுகிறது.   இறைமகன் பிறக்கப்போகிறார் என்பதன் அடையாளமாக டிசம்பர் முதல் தேதியே எங்கள் இல்லங்களில் நட்சத்திரம் தொங்கவிட்டு இது கிறிஸ்துமஸ் மாதம் என்று அறிவிக்கிறோம்.  ஆண்டும் தோறும் உங்கள் மனதை சுத்தமாக வைத்துக் கொள்ள கிறிஸ்து  தன் பிறப்பின் மூலம் வாய்ப்பளிக்கிறார்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிறது. நான் வாழும் ஸ்வீடனில் இந்த புனித நாள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

1)     முதல் இடத்தை பிடிக்கும் கிறிஸ்மஸ் பாசல் சந்தை:

ஸ்வீடன் பொறுத்த வரையில் பாசல் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் சந்தைப் பகுதிகள் நிறைந்த இடமாகும். பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் மத்தியில் இருக்கிறது. இது சுவிட்சர்லாந்தில் ரைன் ஆற்றங்கரையில் மிகப்பெரிய நகரமாக விளங்குகிறது.  இங்கு கிறிஸ்துமஸ் சந்தை நவம்பர் மாதம் தொடங்கி விடும்.காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை டிசம்பர்  முடியும் வரை இயங்குகிறது.

விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படகு சவாரி, தேவாலையங்கள், விளக்குகளால் ஜொலிக்கும் மரங்கள் குழந்தைகள் விரும்பி, வியந்து பார்க்க வைக்கும்.   160க்கும் மேற்பட்ட மரங்கள், உள்ளூர் உணவுகள், விதவிதமான சாக்லேட்,பரிசுகள், வறுத்த ஆப்பிள் டோனட்ஸ், அனைவரையும் ஈர்க்கும் நிகழ்ச்சிகள். ரேக்லெட், குழந்தைகளுக்கான விசித்திர காடு, மாயாஜாலமான இடமாக பாசல் இருக்கிறது.

Geneva

2)     சுவிட்சர்லாந்தின் ஜெனீவா:

பிரெஞ்சு பேசும் மக்கள் இருக்கும் மிகப்பெரிய நகரம்  ஜெனீவா. சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் நகரமாக இருக்கிறது. அழகிய இயற்கை காட்சிகள், பாரம்பரிய உணவுகள்,இனிப்புகள், சுஷி, சாண்ட்விச் கள் மற்றும் சாக்லேட் மிக பிரபலமானவை. இந்த இடமும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்பது வித்தியாசமாகவும் வியப்புகளை ஏற்படுத்தும் விதமாக இங்கு இருக்கிறது.

சுவிட்சர்லாந்தை பொறுத்தவரை இன்டர்லேக்கனில் கிறிஸ்துமஸ் ஒரு அற்புதமான அனுபவத்தை கொடுக்கும். பனிமூட்டமான இடம்,இண்டர்லேக்கனில் அழகாக அலங்கரிக்கப் பட்ட கிறிஸ்துமஸ் சந்தை ஒரு மயக்கும் காட்சியாக இருக்கும். கிறிஸ்துமஸ் கண்காட்சியை பொறுத்தவரை ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இங்கு இருக்கும் தெருக்களில் சூடான மல்ட் ஒயின்,சாக்லேட் ஷோ, வறுத்த கஷ்கொட்டை கள், சுடப்பட்ட ஜிஞ்சர்பிரட், பேஸ்ட்ரிகள், குக்கீகள் என ஏராளமான உணவுகள் கிறிஸ்துமஸ் வரவேற்க தயாராகி வருகிறது.

3)     சுவிட்சர்லாந்தின் லூசர்ன்:

அதிக மக்கள் தொகை நிறைந்த இடமாக இருக்கும் லூசர்னில் பழைய நகரத்தில் உள்ள பிரான்சிஸ்கன் தேவாலயம் இருக்கிறது. இதற்கு  முன்னால் இருக்கும்  சதுக்கத்தில் கிறிஸ்மஸ் சந்தைகள் நடைபெறும். கண்ணாடி, ஜவுளி, மட்பாண்டங்கள், மரம் மற்றும் உலோகம் போன்ற பல்வேறு பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் பானங்கள் மற்றும் கையால் செய்யப்பட்ட

பாரம்பரிய கிறிஸ்துமஸ் தயாரிப்புகளை இங்கு பார்க்க முடியும். பரிசுகளில் மெழுகுவர்த்திகள், கையால் பின்னப்பட்ட தொப்பிகள் மற்றும் செம்மறி தோல் கையுறைகள் ஆகியவை கிடைக்கும். தெருக்களும்,கடைகளும், மரங்களும் கலகலரான வண்ண விளக்குகள் கிறிஸ்துவை வரவேற்க ஜொலிக்க தொடங்கிவிட்டது.

ஆகவே நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் இந்த புனித நாள் இயேசுவின் வருகை எல்லோக்கும் ஆசிர்வாதமாக அமையட்டும். கிறிஸ்துமஸ் பிரார்த்தனைகளையும் ஆசிர்வாதங்களையும் பயன்படுத்தி இயேசுவின் பிறப்புக்கு நன்றி செலுத்துங்கள்.

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் மிகவும் பரபரப்பாகவும், உற்சாகத்துடன் இருக்கிறது ஸ்வீடன். இயேசுவை எல்லோரும் வரவேற்க தயாராவோம்…. என் இனிய தமிழ் சொந்தங்களுக்கு கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள் என்றார் ஜெனிஃபர் டேவிட்.

–    யாழினி சோமு

Related Posts