அடடே!: வனிதா திருமணத்தில் இரு ஆச்சரியங்கள்!

சென்னை; நடிகை வனிதா விஜயகுமார் விஜய் நடித்த சந்திரலேக படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.  அதைத் தொடர்ந்து ஒரு சில படங்கள் நடித்தாலும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை.ஆனால் அவரை எல்லோருக்கும் தெரியும் வகையில் அமைந்தது  பிக் பாஸ் நிகழ்ச்சி.  ஆம்’ கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி எல்லோர் மத்தியில் மிகப் பிரபலமானது. சினிமாத் துறையில் தெரியாதவர்கள் கூட இந்த நிகழ்ச்சி வழியாக பிரபலமானார்கள்.

நடிகை வனிதா திரைப்படங்கள் நடித்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிக்பாஸ் வனிதா என்ற அளவுக்கு எல்லோரும் மனதிலும் இடம் பிடித்தார். வனிதா, பீட்டர் பவுல்  என்பவருக்கும்  இன்று மாலை நான்கு மணிக்கு (ஜூன் 27) திருமணம் நடைபெற்றுது. தம்பதியர் இருவரும் தனது அன்பை முத்தம் வழியாக வெளிப்படுத்திக் கொண்டனர்.

வனிதாவிற்கு இது மூன்றாவது திருமணம். ஏற்கனவே இரண்டு திருமணம் கருத்து வேறுபாடு காரணமாக  சட்டப்படி பிரிந்து வாழ்ந்து வந்தார்.  இவருக்கு ஒரு ஆண், இரண்டு பெண்குழந்தைகள்.  மூத்த மகன் இவருடன் இல்லை தனியாக வசிக்கிறர். இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இவருடன் இருக்கிறார்கள். வனிதாவின் குடும்ப பிரச்சனை  பத்திரிக்கையில் அடிக்கடிவருவது அனைவரும் அறிந்த ஒன்றே.

வனிதா மற்றும்  பீட்டர் பவுல்  திருமணம் கிறிஸ்துவ முறைப்படி வனிதா இல்லத்தில் இன்று மாலை 4 மணிக்கு  நடைபெற்றுள்ளது. நெருங்கிய  தோழி அம்பிகா மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

இந்த திருமணத்தில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மணப்பெண்ணான வனிதாவை அவரது மூத்த மகள் தோழியாக அம்மாவின் கரம் பிடித்து பீட்டர் பவுல் கையில் ஒப்படைத்தது. இரண்டு வயதுக்கு வந்த குழந்தைகள் முன் லிப்லாக் கிஸ் அடித்த வனிதா, பீட்டர் தம்பதியினரை என்ன சொல்வது. இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் சர்சையாகிவருது குறிப்பிடத்தக்கது.

இனியன்

Related Posts