விஜய் தேவரகொண்டாவின்  ‘ஃபேமிலி ஸ்டார்’   ரிலீஸ் தேதி !

விஜய் தேவரகொண்டாவின்  ‘ஃபேமிலி ஸ்டார்’   ரிலீஸ் தேதி !

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில், விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘சீதா ராமம்’ படப்புகழ் மிருணாள் தாக்கூர் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை பரசுராம் பெட்லா இயக்குகிறார்.

சமீபத்தில் வெளியான டைட்டில் டீசர் மாஸஸாக, கிளாஸாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் இருந்தது. இன்று படத்தின் வெளியீட்டு தேதியை கண்ணைக் கவரும் போஸ்டருடன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஏப்ரல் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இப்படம், குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் வகையிலான பொழுதுபோக்குப் படமாக அமையும் என உறுதியளிக்கிறது. தில்ராஜு ஒரு நல்ல வெளியீட்டு தேதியை நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களுக்காக அறிவித்துள்ளார்.

இப்போது வெளியாகியுள்ள போஸ்டரில் விஜய் தேவரகொண்டா லுங்கி அணிந்து, தோளில் சாக்குப்பையை மாட்டிக்கொண்டும், வாயில் ஆதார் அட்டையுடன் ஓடுவது போல ஒரு சாதாரண நடுத்தரக் கணவரின் வாழ்க்கையை கச்சிதமாக இந்த போஸ்டர் படம்பிடித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர்கள் தில்ராஜூ மற்றும் சிரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். கோபிசுந்தர் படத்திற்கு இசையத்துள்ளார்.

Related Posts