விடுதலை – கள்வன்.. தொடர்பு! வெற்றிமாறன் உடைத்த ரகசியம்!

விடுதலை – கள்வன்.. தொடர்பு! வெற்றிமாறன் உடைத்த ரகசியம்!

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் பாரதிராஜா நடிக்கும்கள்வன்படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், “’கள்வன்படத்துக்கும் எனக்கும் சில தொடர்புகள் உள்ளது. நான் விடுதலை படத்தில் பாரதிராஜா சார் தான் நடிக்க வேண்டும் என முடியெல்லாம் வெட்டி லுக் டெஸ்ட் பண்ணேன். நான் லொகேஷன் பார்க்க சென்ற பிறகு அவர் வேண்டாம் என நினைத்தேன். அதற்கு என்னிடம் பாரதிராஜா செல்லமாக கோபித்துக் கொண்டார். அதன்பிறகு கொஞ்ச நாள் கழித்து, இதே முடியோடு என்னை வைத்து ஒருத்தர் படம் எடுக்கப் போறாருன்னு சொன்னாரு. அது தான்கள்வன்படம்.

நாங்கவிடுதலைபடம் ஷூட் பண்ண இடத்தில் தான்கள்வன்படமும் ஷூட் பண்ணினார்கள். காட்டில் படப்பிடிப்பு என்பது ரொம்ப கஷ்டம். ஒளிப்பதிவாளருக்கு எவ்வளவு சவால் இருந்திருக்கும் என்பது தெரியும். ஒரு படத்துக்காக காத்திருப்பது என்பது மற்றவர்களை விட இயக்குநருக்கு ரொம்ப சவாலாக இருந்திருக்கும். 6 மாதம் வரை ஒரு நம்பிக்கை வரும். பின் போகும், திரும்ப நம்பிக்கை வரும் என பல விஷயங்கள் உள்ளது.

நம்ம யானையை வைத்தோ, டைனோசரை வைத்தோ படம் எடுத்தாலும் திரைக்கதையும், கதையும் நல்லா இருந்தா மட்டும் தான் படம் ஓடும். ஜிவி நடிகராக சிறப்பாக பரிணமித்து வருகிறார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்என தெரிவித்தார்.

Related Posts