காதலர் நெஞ்சங்களை வெல்லும்” வாணி போஜன் !
சின்னத்திரை மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர் நெஞ்சங்களை வென்ற நடிகை வாணி போஜன் “ஓ மை கடவுளே” படம் முலமாக வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார். அவரின் பங்களிப்பு “ஓ மை கடவுளே” படத்தின் பெரும் பலமாக மாறியிருக்கிறது. அவரை சின்னத் திரையில் பார்த்த ரசிகர்கள் அவரை பெரிய திரையில் காண பெரும் ஆவலுடன் உள்ளனர்.
படம் குறித்து நடிகை வாணி போஜன் கூறியதாவது….
“ஓ மை கடவுளே” என்னென்றும் என் இதயத்திற்கு நெருக்கமான படமாக இருக்கும். பெரிய திரையில் என் பயணத்தை தொடங்கிய பிறகு மிகவும் கவனமாக, தெர்ந்தெடுத்த பாத்திரங்களை மட்டுமே நடித்து வருகிறேன். தெலுங்கில் ஒரு மிகப்பெரும் ஹிட் அறிமுகத்துக்கு பிறகு தமிழில் ஒரு அற்புதமான வாய்ப்பாக, எனக்கு மிகப்பெரும் ஆசிர்வாதமாக “ஓ மை கடவுளே” படம் அமைந்திருக்கிறது. காதல் கதைகளுக்கென்றே ஒரு வடிவம் இருக்கும். ஆனால் இயக்குநர் அஷ்வத் அதில் ஃபேண்டஸி தன்மையை புகுத்தி படத்தை மேலும் வெகு அழகாக மாற்றிவிட்டார்.
இப்படம் புதிதாக காதலிக்கும் இளைஞர்கள், காதலில் வெகு காலம் பயணம் செய்பவர்கள், காதல் தம்பதியர் என அனைவருக்கும் வாழ்வுன் பார்வையை மாற்றித்தரும் பெரு விருந்தாக அமையும். அசோக் செல்வனின்