மீண்டும் இந்து மதத்தை மீண்டும் அவமதித்தாரா வைரமுத்து?!
பாடலாசிரியர் வைரமுத்து இந்து மதத்தை அவமதித்துவிட்டதாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
“கொரோனா விழிப்புணர்வு” கவிதை ஒன்றை எழுதி சற்று முன் வெளியிட்டுள்ளார்.
அதில், “தூணிலுமிருப்பது துரும்பிலுமிருப்பது
கடவுளா? கரோனாவா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
இதுதான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்து மத பக்தர்கள் இது குறித்து தெரிவிப்பதாவது:
“வைரமுத்து குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகள், இந்து மத புராணங்களில் ஒன்றான, பாகவத புராணத்தில் வரும் பிரபல வார்த்தைகளாகும்.
அசுரகுலமான தைத்தியர்குல அரசனாக விளங்கிய இரணிய கசிபு. இவன், தானே, கடவுள் என்றும் தன்னையே அனைவரும் வணங்க வேண்டும் என உத்தரவிட்டான். அவனது மகன் பிரகலாதனோ, ஸ்ரீமன் நாராயணன் (விஷ்ணு) தான் இந்த ஈரேழு உலகத்திற்கும் கடவுள் என்றான்.
இதனால் மகன் என்றும் பாராமல் அவனை கொல்ல இரன்ய கசிபு முயன்றான். முடியவில்லை.
இறுதியில், “ஸ்ரீமன் நாராயணனையே கொல்கிறேன். எங்கே அவன்?” என இரன்ய கசிபு கேட்க, பிரகலாதன், “அவன் தூணிலும் இருக்கிறார்.. துரும்பிலும் இருக்கிறார்!” என்றான்.
உடனே அருகிலிந்து தூணை காட்டி, “இங்கும் ஸ்ரீமன் நாராயணன் இருக்கிறானா?” என இரண்ய கசிபு கேட்க, “உடைத்துப் பாருங்கள்!” என்றான் பிரகலாதன்.
இரண்ய கசிபுவும் தன் கதாயுதத்தால் அத்தூணை உடைக்க, ஸ்ரீமன் நராயணன், நரசிம்ம அவதாரமாக வெளி வந்து இரண்ய கசிவுவை அழிக்கிறார்.
இதுதான், பாகவத புராணம் சொல்லும் கதை.
தவிர கடவுள் கிருஷ்ணர், “அரக்கர்களில் களில் நான் பிரகலாதனாய் இருக்கிறேன்” என கீதையில் சொல்லியிருக்கிறார்.
ஆக, ஸ்ரீமன் நாராயணன கடவுள் குறித்து இரண்யகசிபு கேட்ட எகத்தாளமான கேள்வியை, பாடலாசிரியர் வைரமுத்து எழுப்பியிருக்கிறார்.
இதே வைரமுத்து பிற மத புனித நூல்களில் குறிப்பிட்டுள்ள பிரபல வரிகளை கிண்டல் செய்வாரா?” என்று இந்து மத பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
- தமிழன் குரல் இணைய இதழுக்காக, இனியன்