வடம்: விமர்சனம்: ஆக்ரோஷமா.. அரைத்த மாவா?

வடம்: விமர்சனம்: ஆக்ரோஷமா.. அரைத்த மாவா?

தென் தமிழகத்தின் வீர விளையாட்டான வடமாடு மஞ்சுவிரட்டை மையமாக வைத்து, ஊர் பகை, நட்பு, எதார்த்தமான கிராமத்து அரசியலை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.

கதை: 

ஊர் பெரியவர் சந்தனவேல் (நரேன்) ஒரு பக்கம் ‘நல்ல மனுஷன்’ இமேஜோடு காளைகளை வளர்க்க, அவரது மகன் வெற்றிவேல் (விமல்) அப்பாவைப் போலவே காளைகளின் காதலனாக வலம் வருகிறார். இவர்களது காளையை யாராலும் பிடிக்க முடியாதது, இன்னொரு வசதி படைத்த ரத்னவேலுக்கு (நட்டி) கௌரவப் பிரச்சினையாக மாறுகிறது. இதற்கு நடுவில் கர்ணன் (மதுசூதனன்) என்பவருடன் மோதல் என கதை சூடுபிடிக்கிறது. திடீரென ரத்னவேல் கொல்லப்பட, அதன்பின் நடக்கும் அதிரடித் திருப்பங்களே இந்தத் திரைக்கதை!நடிப்பு:  

  • விமல்: காளைகளிடம் காட்டும் அன்பாகட்டும், வில்லனிடம் அரிவாளைக் கொடுத்து “கொன்னுட்டு ஆத்திரத்தை தீத்துக்கய்யா” என உருகுவதாகட்டும்… விமல் ‘ஸ்கோர்’ செய்கிறார்! சண்டைக் காட்சிகளிலும் மனுஷன் ‘தூள்’ கிளப்பியிருக்கிறார்.

  • நட்டி நடராஜ்: மாடுகள் ஜெயிக்கும்போது காட்டும் பாசமும், தோற்கும்போது காட்டும் வெறுப்பும் என ரத்னவேல் பாத்திரத்தில் நட்டி நயமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

  • சான்ஷ்கா ஸ்ரீ: டூயட் பாட மட்டும் வராமல், கதைக்குத் தேவையான அழுத்தமான நடிப்பைத் தந்து கிராமத்து அழகியாகக் கவர்கிறார்.

  • கலகலப்பு டீம்: பால சரவணனின் நக்கல் வசனங்கள் படத்திற்குப் பெரிய பலம். முனிஸ்காந்த் தனது டைமிங் காமெடியால் சிரிக்க வைத்து, இறுதியில் அதிர்ச்சியும் கொடுக்கிறார்.


தொழில்நுட்பம்:

  • டி. இமான்: கிராமத்து மண் வாசனை மாறாத பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்குப் பெரிய பலம்.

  • ஒளிப்பதிவு: பிரசன்னா கே.குமார் மஞ்சுவிரட்டு காட்சிகளைப் படமாக்கிய விதம், நம்மை நேராகத் தியேட்டரில் இருந்து வாடிவாசலுக்கே அழைத்துச் செல்கிறது!

  • இயக்கம்: இயக்குநர் கேந்திரன், வெறும் ஜல்லிக்கட்டை மட்டும் காட்டாமல், அதற்குப் பின்னால் இருக்கும் வாழ்வாதாரப் போராட்டங்களைச் சொன்னதில் ஜெயிக்கிறார்.


ப்ளஸ் & மைனஸ்   

பலம்   பலவீனம்  
விமல் – நட்டி கூட்டணியின் மிரட்டலான நடிப்பு இரண்டாம் பாதியில் வேகம் சற்று குறைவு
தத்ரூபமான வடமாடு மஞ்சுவிரட்டு காட்சிகள் சில இடங்களில் வழக்கமான பழைய ‘டெம்ப்ளேட்’ காட்சிகள்
உணர்ச்சிகரமான பின்னணி இசை க்ளைமாக்ஸை ஓரளவுக்கு யூகிக்க முடிவது

ஃபைனல் கமெண்ட்:   கிராமியப் படங்கள், அதிலும் குறிப்பாக மஞ்சுவிரட்டுப் பிரியர்களுக்கு இந்தப் படம் ஒரு பக்காவான ‘ட்ரீட்’.