“நன்றிகெட்டவர்!”: நடிகரை விளாசிய பிரபல இயக்குநர்!

வீீீண் கவுரவமும், வறட்டுப் பிடிவாத மும் கொண்ட மனிதர் கள். அவற்றுக்காக ரத்தம் சிந்தவும் சிந்தவைக்கவும் தயங்காதவர்கள். இவர்களது வாழ்க்கையை அச்சும் அசலுமாக சொல்லிய திரைப்படம்தான் மதயானைக் கூட்டம். இந்த முதல் படத்தின் மூலமே கவனத்தை ஈர்த்தவர், இயக்குநர் விக்ரம் சுகுமாரன்.
பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணி புரிந்த இவர், வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் கொடிவீரன் படத்திலும் நடித்தார். மதுரையைக் களமாக கொண்ட ஆடுகளம் படத்திற்கு உரையாடல் எழுதினார்.
சாந்தனு நாயகனாக நடித்த, இராவண கோட்டம் படத்தை இயக்கியும் கவனத்தை ஈர்த்தார்.
இவரது முதல் படமான மதயானை கூட்டத்தில், எழுத்தாளர் வேல ராமமூர்த்தையை நடிக்க வைத்தார். அவர் தற்போது திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், “இயக்குநர் விக்ரம் சுகுமாரன், மிகவும் வேண்டிக் கேட்டுக்கொண்டதால் அவரது மதயானை கூட்டம் படத்தில் நடித்தேன்” என்று கூறியிருந்தார்.
இதற்கு விக்ரம் சுகுமாரன் தனது முகநூல் பதிவின் மூலம் பதில் அளித்து உள்ளார்.
அந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது:
“ராவண கூட்டம் வேலராமமூர்த்தி மிளகாய் “என்னும் படத்தில் துணை நடிகராக நடித்திருந்தார் அதைப் பார்த்து தான் நான் என்னுடைய மதயானை கூட்டம் படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தேன் நான் அவரைக் கெஞ்சி நடிக்க வைத்ததாக பேட்டி கொடுக்கிறார் இவருக்கு என்ன தகுதி இருந்தது நான் நடிக்க வைக்க அறிவொளி இயக்கத்தில் நடித்ததற்காக யாரும் வாய் பண்புத் தரமாட்டார்கள் சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்து விட்டதால் நன்றி மறந்து பேசுகிறார்கள் _ நன்றி கெட்ட மனிதருக்கு நாய் கள் மேலடா என்று தான் சொல்லத் தோன்றுகிறது!”
இது திரையுலகிலும், நெட்டிசன்களிடம் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
“திரைப்படத்துக்கு கேப்டன் எனப்படுபவர் இயக்குநர்தான். இயக்குநர் விக்ரம்சுகுமாரன் பார்வை வேல ராமமூர்த்தி மீது பட்டதால்தான், இன்று அவர் பிரபல நடிகராக வலம் வருகிறான். எழுத்தாளராகவும் இருக்கும் வேல ராமமூர்த்தி இதை உணராமல், ஏதோ தனது நடிப்பைப் பார்த்து இயக்குநர் கெஞ்சிக் கூத்தாடி நடிக்கவைத்ததாக சொல்லி இருப்பது தவறு.
“ஏறுகிற வரை எலி.. ஏறிவிட்டால் புலி” என்பது இதுதான் போல!” ” என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.