விமர்சனம்: திருவின் குரல்

விமர்சனம்: திருவின் குரல்

ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி, பாரதிராஜா, ஆத்மிகா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் திருவின் குரல்.

வாய் பேச முடியாத காது கேளாத இளைஞர் அருள்நிதி. அவரது அப்பா பாரதிராஜாவுக்கு விபத்து ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

அப்போது அருள்நிதியின் அக்கா மகள், மருத்துவமனையில் நடக்கும் ஒரு கொலையை பார்க்கிறார். அந்த கொலையாளிகள், இவளை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.

அருள்நிதி வழக்கம்போல் சிறப்பாக நடித்துள்ளார். அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை என்றதும் பதறுவது, தனது குடும்பத்து பெண்ணை ஒருவன் மோசமாக பார்க்கிறான் என்றதும் பொங்குவது, வில்லன்களை புரட்டி எடுப்பது என சிறப்பாக நடித்துள்ளார்.

பாரதிராஜா, இயல்பான அப்பா. மகனின் திருமணத்தை பார்க்க மாட்டோமா என ஏங்குவது, வயிற்று வலியால் துடிப்பது என பல காட்சிகளில் உருக வைக்கிறார்.

நாயகி ஆத்மிகா.. அழகு, நடிப்புத்திறமை இருந்தும் வழக்கம் போல சில காட்சிகளில் மட்டும் வருகிறார்.

வில்லன்களின்தலைவராக வரும் அஷ்ரப் அசத்துகிறார்.

இசை, ஒளிப்பதிவு குறித்து தனியாகச் சொல்வதற்கு ஏதுமில்லை.

ஆனால் படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். மருத்துவமனை லிப்ட் ஆபரேட்டர், அட்டெண்டர், வாட்ச்மேன் ஆகியோர் சேர்ந்து சரமாரியாக கொலைகள் செய்கின்றார்கள்.. கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறார்கள்.. இப்படிப்பட்டவர்கள் ஏன் மருத்துவமனையில் கடை நிலை ஊழியர்களாக வேலை பார்க்க வேண்டும்?

மருத்துவமனை வளாகத்திலேயே கொலை செய்கிறார்கள்.. நோயாளிக்கு விச மருந்து கொடுத்து சாகடிக்க வைக்கிறார்கள்.. இதெல்லாம் நம்பும்படி இல்லையே.

தவிர நாட்டிலேயே அரசு மருத்தவ கட்டமைப்பு சிறப்பாக இருப்பது தமிழ்நாட்டில்தான். ஆனால் இங்கு அரசு மருத்துவமனையில் கடை நிலை ஊழியர்களை வில்லனாக காண்பிப்பது என்ன நியாயம்.

படத்தில் சுவாரஸ்யம் இல்லை என்பதுடன், கண்டண்ட்டும் சரியில்லை.

அறிமுக இயக்குநர் ஹரீஸ் பிரபு, அடுத்த படத்தில் சிறப்பான திரைக்கதை இயக்கத்துடன் முத்திரை பதிக்க வாழ்த்துகள்.

Related Posts