100 திரைப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ள ‘ஓட விட்டு சுடலாமா’ படத்தின் பாடல்!

இதுவரை திரையுலகம் காணாத புதுமையாகவும் குறிப்பிடத்தக்க சாதனையாகவும் ஒரு படத்தின் பாடலை தமிழ் மற்றும் மலையாள மொழிகளின் நூறு திரையுலகப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ளனர்.
வினித் மோகன், பிரகாஷ் வேலாயுதன், சதீஷ் வரிகாட்டு ஆகியோர் தயாரிக்க, எம்.வி.ஜிஜேஷ் இயக்கத்தில் இப்படத்தின் யுகன் ராஜ் – பத்மா கோபிகா ஜோடியாக நடிக்கும் படம், ‘ஓட விட்டு சுடலாமா’.
ஜன கன மன படத்தை இயக்கிய டிஜே மிரட்டும் வில்லனாக வருகிறார். தயாரிப்பாளர் வினித் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.இப்படத்தில் இடம்பெறும் ‘ டீக்கடை வீட்டிலே பொண்ணு’ என்கிற பாடல் இடம் பெறுகிறது. இதன் வீடியோவைத் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் எஸ். ஏ. சந்திரசேகரன், கே. பாக்யராஜ், பேரரசு,சி பி மலையில், லால்,தி ரைக்கலைஞர்கள் , அஜ்மல், பிருத்திவிராஜ், உன்னி முகுந்தன், ரேச்சல் ஜேக்கப் நோலா, ஆன்டோ ஜோசப், சாய்ஜு குருப் போன்ற நூற்றுக்கு மேற்பட்ட தமிழ், மலையாளத் திரையுலகப் பிரபலங்கள் தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வாழ்த்தி உள்ளார்கள்.
படம் குறித்து இயக்குநர் ஜி.கே.எஸ். கூறும்பது, “தன் காதலியை சிதைத்த, தாதா கும்பலைப் பழிவாங்க, அமானுஷ்ய சக்தி கொண்ட காருடன் புறப்படுகிறான், நயகன். இப்படத்தின் கதைநாயகன் என்று கூறினால் அந்த கான்டெஸா காரைத்தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு கார் ஒரு குணச்சித்திரமாகவும் படம் முழுக்கப் பயணம் செய்யும் ஒரு பாத்திரமாகவும் வருகிறது. படத்தின் முதல் பாதி படம் அமானுஷ்யம் கொண்டதாகவும் இரண்டாவது பாதி நகைச்சுவை உணர்வு கொண்டதாகவும் இருக்கும்.
இப்படத்தில் படப்பிடிப்பு கம்பம் , குமுளி, தேனி மற்றும் தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது” என்றார்.
ஜூலையில் படம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.