தி பெட்: சினிமா விமர்சனம்
ஐ டி துறையில் பணிபுரியும் சென்னை இளைஞர்கள் நால்வர், ஜாலியாக பொழுதைக் கழிக்க, பாலியல் தொழிலாளியை அழைத்துக்கொண்டு, ஊட்டிக்குச் செல்கிறார்கள். போகிற இடத்தில், இவர்கள் குடிக்க.. அப்புறம் அவள் குடிக்க… ஒன்றும் நடக்கவில்லை.
ஒன் பேட் மார்னிங்க.. நான்கு இளைஞர்களில் ஒருவனை காணவில்லை… அந்த பெண்ணையும் காணோம்!
நண்பர்கள் பதறி நிற்க.. இன்னொரு புறம், தனது பெண்ணை காணவில்லை என ஒரு பெண்மணி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க… விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லராக போகிறது படம்.
நான்கு நண்பர்களில் ஒருவராக ஸ்ரீகாந்த். சகாக்களுக்கு போதை ஏற்றிவிட்டு அவர் செய்யும் காரியம்.. பாலியல் தொழிலாளியிடம் அவர் நடந்துகொள்ளும் விதம்… போலீஸ் தாக்குதலுக்கு ஆளாகி நிற்கும் பரிதாபம் என கவனத்தை ஈர்க்கிறார்.
பாலியல் தொழிலாளியாக நடித்து இருக்கிறார் சிருஷ்டி டாங்கே. அந்த அப்பாவி குழந்தை முகத்துக்கு இந்த கேரக்டரையா கொடுப்பது? ஆனாலும் ஆபாச காட்சிகள் இன்றி பார்வையாலேயே காமத்தொ காண்டு வந்து கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்து இருக்கிறார்.
பிளாக் பாண்டி, வி.ஜே. பப்பு உள்ளிட்டோர் வழக்கமான நண்பர்கள் கதாபாத்திரங்கள்.
அளவுக்கு மீறி நடித்து எரிச்சலூட்டம் ஜான் விஜய், இதில் அளவைக் குறைத்து எரிச்சலையும் குறைத்து இருக்கிறார். இன்னும் குறைத்துக்கொள்ள வாழ்த்துகள்.
தாஜ்நூர் இசையில், “காற்றிலாடும் இறகோ..” உள்ளிட்ட பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. க்ரைம் த்ரில்லருக்கு ஏற்ற பின்னணி இசை, படத்துக்கு பலம்.
கே.கோகுலின் கேமரா, ஊட்டியின் அழகை சிறப்பாக படம் பிடித்து காட்டி இருக்கிறது.
காதல், காமம், க்ரைம் என ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் மணி பாரதி.
த்ரில்லர் விரும்பிகள் ரசித்து பார்க்கலாம்.
ரேட்டிங்: 3.1/5
