நடிகரின் உயிர் காக்கும் நிஜ ஹீரோ எம்.எல்.ஏ. சரவணன்!

கட்டுமஸ்தான உடல், கம்பீர மீசை என  திரைப்படங்களில் தோன்றிய நடிகர் ர் தவசியை ரசிகர்கள் நன்கு அறிவார்கள்.

‘கிழக்குச் சீமையிலே’ திரைப்படத்தில்  ஆரம்பித்த இவரது பயணம்,  ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படம் வரை தொடர்கிறது.

குறிப்பாக, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘கொம்பன்’ உள்ளிட்ட படங்கள் இவரை அடையாளப்படுத்தின.

தவசி

இந்த நிலையில், உணவுக்குழாயில் ஏற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசி, உதவ ஆள் இன்றி தவித்தார். மெலிந்த அவரது உடல் தோற்றத்துடன் சமூகவலைதளங்களில் இது குறித்து தகவல் பரவி பார்ப்பவரை பதறவைத்தது.

மேலும் ஒரு வீடியோவில், “பல வருடங்களாக படங்களில் நடித்துள்ளேன். எனக்கு இப்படி ஒரு வியாதி வரும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. கடவுள் இப்படியொரு வியாதியைக் கொடுத்துவிட்டான்.

சிகிச்சைக்கு பணம் இன்றி செலவுக்கு ரொம்ப சிரமப்படுகிறேன். ஒன்றும் செய்ய முடியவில்லை, இதைப் பார்த்து சக நடிகர்கள் எனக்கு உதவுங்கள்’’ என்று கண்ணீர் மல்கக் கோரினார்.

இந்த நிலையில் மதுரை சரவணா மருத்துவமனை சார்பில் அதன் உரிமையாளரும், திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏவுமான டாக்டர் சரவணன் தவசி்க்கு உதவி வருகிறார். தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் தவசிக்கு சிகிச்சை அளிக்கிறார்.

இப்போது..

 இதுகுறித்து எம்எல்ஏ சரவணன் கூறுகையில், ‘‘தவசிக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் வந்துள்ளது. அதனால், சாப்பிட முடியாமல் அவர் சிரமப்பட்டார்.

தற்போது எண்டோஸ்கோப்பி மூலம் சிகிச்சை அளித்து சாப்பிட வைத்துள்ளோம். அவரது நிலையை உணர்ந்து இலவசமாக எங்கள் மருத்துவமனை சார்பில் சிகிச்சை வழங்கி வருகிறோம்,

இருப்பினும், இவருக்கு யாரேனும் உதவ நினைத்தால் அவரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினால் வறுமையில் இருக்கும் அவரின் குடும்பத்தாருக்கு அது பேருதவியாக இருக்கும்’’ என்றார்.

டாக்டர் சரவணன், “சரித்திரம்” உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரவணன் – தவசி

இவர் ஏழை மக்கள் பலருக்கும் தனது அறக்கட்டளை மூலம் சிகிச்சைக்கு உதவி அளித்து வருகிறார்.

 

 

Related Posts