ஹாலிவுட்டில் கலக்கும் தமிழ்ப்பெண்..!
ஹாலிவுட்டின் பிரபல நடிகையும் எழுத்தாளருமான மிண்டி கலிங் என்பவர் இயக்கிய நெட்ஃப்ளிக்ஸ் தொடர்தான் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ (Never Have I Ever ).அந்தத் தொடர் தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த தொடர் சமூகவலைதளங்கள், இணைய இதழ்களின் பாராட்டையும் பெற்றது.
’’நெவர் ஹேவ் ஐ எவர்’’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் மைத்ரேயி ராமகிருஷ்ண் நடித்துள்ளார். இவர் பெற்றோர் ஈழத்திலிருந்து கனடாவிற்குப் புலம் பெயர்ந்தவர்கள். மைத்ரேயியின் பள்ளிப்படிப்பு கனடாவில் படித்தார். படிக்கும் போதே நாடகங்களில் நடித்தும் ,சிலவற்றை எழுதி இயக்கியுமிருக்கிறார்.
பொதுவாக ஹாலிவுட்டில் நடிக்க வேண்டுமென்றால் முறையான நடிப்புப் பயிற்சி பெற்றவர்கள்தான் உள்ளேயே நுழைய முடியும் என்ற சூழ்நிலையில். எந்த முறையான பயிற்சியும் பெறாத இவர் நடிப்புக்கான பல்வேறுபட்ட சோதனைகளைக் கடந்து இந்தத் தொடரில் நடிக்கத் தேர்வாகி இருக்கிறார்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கவிருந்த இளம் நடிகைக்கான தேர்வுக்கு 15 ஆயிரம் மாணவிகள் விண்ணப்பித்து இருந்திருக்கிறார்கள். நம்பிக்கையிழந்த மைத்ரேயிக்கு ஒரு வசனத்தை எழுதி பிரதி அனுப்பி அதில் ஒரு பாத்திரத்தை தேர்வு செய்து வசனத்தைப் பேசி நடித்து வீடியோவாகப் பதிவு செய்து அனுப்பச் சொல்லியிருந்தார்கள்.
மைத்ரேயினும் விளையாட்டாக அனுப்பியிருக்கிறார். மீண்டும் இன்னொரு பிரதி அனுப்பி அடுத்த கட்ட சோதனை. இப்படியாக ஆறு வீடியோ நடித்து அனுப்பி வைத்தார்.
பிறகு நேரடித் தேர்விலும் கலந்து கொண்டார். கனடாவில் இருந்து அமெரிக்கா சென்று வந்து பல வாரங்கள் கடந்த நிலையில் ஒருநாள் அழைப்பு வந்திருக்கிறது. ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ அந்தத் தொடரில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக கூறியிருக்கின்றனர்.
நம்ப முடியவில்லை மைத்ரேயினுக்கு ஆச்சரியம். ஹாலிவுட் வாய்ப்பு ,ஆங்கிலம் பேசவேண்டிய நடிகை என்ற வகையில் உங்களது பெயரை மாற்றி விடுவீர்களா? என்று கேட்ட போது
நான் ஹாலிவுட் படத்தில் நடிப்பதாக இருந்தாலும் ஆங்கிலம் பேசி நடிப்பதாக இருந்தாலும்கூட என் பெயரை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன் என்கிறார் தீர்மானமாக கூறுகிறார்.
இந்த தொடர் நடிப்பு அனுபவம் பற்றி அவரிடம் கேட்டபோது . நான் கனடிய தமிழ்ப் பெண், ஈழத்திலிருந்து புலம்பெயந்த குடும்பம் எங்களது. ஆகவே அந்த அடையாளத்தை என்றும் இழக்க மாட்டேன் என்று கூறினார்.
அந்தத் தொடரில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய தமிழ் தம்பதிகளின் மகளாகத் தான் நடித்தேன். இதில் நடிப்பதில் எனக்கு வித்தியாசம் ஒன்றும் இல்லை. மொழி உச்சரிப்பு, நடை உடை ,பாவனையில் சிறு மாற்றம் அவ்வளவுதான். அமெரிக்க இந்திய தமிழ்ப்பெண் ஒருத்தி ஆங்கிலேயர்கள் படிக்கும் உயர்நிலைப்பள்ளியில் அடையாளச் சிக்கலுக்கு ஆளாவது , தன்னை நிரூபிக்கப் பாடுபடுவது என்று கதை போகிறது. அந்தப் பெண்ணுக்கு அங்கு ஏற்படக்கூடிய பிரச்னைகள். அதிலிருந்து எப்படி மீள்கிறாள் என்பது கதை.
இந்த தொடருக்குப் பிறகு மைத்ரேயி ராமகிருஷ்ணனைப் பின்தொடரும் ரசிகர்களாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, இந்தியா, இலங்கை என பல்வேறு நாடுகளிலும் லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறார்கள்.
தான் ஒரு தமிழச்சி என்பதில் பெருமை கொள்வதாகவே கூறுகிறார் மைத்ரேயி.
எஸ். யாழினி