சினி உலகில் ஒரு மெகா சாதனை: லோகேஷ் கனகராஜ் கைகளால் லான்ச் ஆன ‘ஸ்வேன் அகாடமி’!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் ஐபி கிளைம்ப் இணைந்து ‘ஸ்வேன் அகாடமி’யை சென்னையில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது.
திரைக்கதை உலகின் தவிர்க்க முடியாத மைல்கல்லாக உருவெடுத்துள்ள இந்நிகழ்ச்சி, எழுத்தாளர்களின் திறமைகளுக்குச் சிறகு கொடுக்கவும், அவர்களின் படைப்புரிமைகளுக்குப் பாதுகாப்புக் கவசமாகவும் அமையவுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில், ஸ்வேன் அமைப்பின் தலைவரும், இயக்குநருமான சேரன் அனைவரையும் வரவேற்று அகாடமியின் உன்னத நோக்கங்களை உரக்கப் பேசினார்.

