“உச்சநீதிமன்றம் அற்ப வழக்குகளில் நேரத்தை வீணாக்குகிறது!”: ஈஷா ஜகி வாசுதேவ்!

“உச்சநீதிமன்றம் அற்ப வழக்குகளில் நேரத்தை வீணாக்குகிறது!”: ஈஷா ஜகி வாசுதேவ்!

“உச்சநீதிமன்றம் அற்ப வழக்குகளில் நேரத்தை வீணாக்குகிறது!” என கோவை அருகே செயல்படும் ஈஷா மையத்தின் நிறுவனர் ஜகி வாசுதேவ் தெரிவித்து உள்ளார்.

ஈஷா யோகா மையத்தில் உள்ள இரண்டு பெண்கள் கட்டாயத்தின்பேரில் அங்கே இருக்க வைக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. , சொந்த விருப்பத்தின் பேரிலேயே தாங்கள் இருவரும் தங்கியிருந்ததாக அப்பெண்கள் தெரிவித்தனர். ஆகவே அந்த வழக்கை நீதிமன்றம் முடித்துவைத்தது.

முன்னதாக, “ஈஷா மையத்திற்குச் சென்றவர்களில் பலர் காணாமல் போயுள்ளனர். இதில், பலரை காவல்துறையினரால் கண்டறிய முடியவில்லை. ஈஷா மையத்திற்குள்ளேயே தகன மையம் செயல்பட்டு வருகிறது. ஈஷா மையத்திற்குள் செயல்பட்டுவரும் மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள் விநியோகிக்கப்படுகிறது”  என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு  காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது..

மேலும், “ஈஷா மையத்தில் உள்ள 533 பேரிடம் உணவு, பாதுகாப்பு நிலை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான குழு, ஈஷா மையத்தில் முறையாக செயல்பாட்டில் இல்லை” என்றும் தமிழ்நாடு  காவல்துறை தெரிவித்திருந்தது.

இந்த வழக்கின் போது, “தனது மகளுக்கு மட்டும் திருமணம்! மற்ற பெண்களை சந்நியாசியாக்குவது ஏன்?” என்று ஜகி வாசுவுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இரு பெண்கள் கட்டாயமாக ஈஷா மையத்தில் கட்டாயமாக இரு பெண்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். அதே நேரம், ” ஈஷா மீதான மற்ற வழக்குகளை விசாரிக்க அனுமதி அளித்துள்ளது

இது குறித்து ஈஷா யோகா மைய நிறுவனர் ஜகி வாசுதேவ்,   “நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். நீதிமன்றத்தின் கவனம் உண்மையாகவே தேவைப்படும் எண்ணற்ற வழக்குகள் இருக்கும்போது, தவறான நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட அற்பமான மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தனது மதிப்புமிக்க நேரத்தை வீணாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஜனநாயகத்தின் சிறப்புரிமைகளை இன்னும் பொறுப்புடன் பயன்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது” என தெரிவித்து உள்ளார்.

Related Posts