‘மண்டாடி’ பர்ஸ்ட் லுக்: மிரட்டும் சூரி!
நகைச்சுவை நடிகராக புகழ் பெற்ற சூரி, ‘விடுதலை 1, விடுதலை 2, கருடன்’ ஆகிய படங்களில் கதை நாயகனாக மு்ததிரை பதித்தார். இந்த வரிசையில் அடுத்து அவர் நாயகனாக நடித்துள்ள ‘மாமன்’ படம் மே 16ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், ‘விடுதலை’ படத்தைத் தயாரித்த ஆர்எஸ் இன்பொடெயின்மென்ட் நிறுவன், சூரி கதையின் நாயகனாக நடிக்க உள்ள ‘மண்டாடி’ படத்தைத் தயாரிக்க உள்ளது. இப்படத்தின் முதல் பார்வை, இன்று சென்னை நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.
இப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பொறுப்பேற்று இருக்கிறார். படத்தை இயக்கும் அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, வெற்றிமாறனின் உதவியாளராக இருந்தவர். இதற்கு முன்பு இவர் ஜிவி பிரகாஷ்குமார், கவுதம் மேனன் நடித்த ‘செல்பி’ படத்தை இயக்கியவர்.
‘மண்டாடி’ படத்தில் சத்யராஜ், மஹிமா நம்பியார், சஞ்சனா நமிதாஸ், அச்யுத் குமார், ரவீந்திர விஜய், சுஹாஸ் என நட்சத்திரங்கள் பலர் நடிக்கிறார்கள்.
ஜிவி பிரகாஷ் இசையமைக்க, எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.
பீட்டர் ஹெயின் சண்டைக் காட்சிகளை அமைக்க, கிரண் வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
இந்நிலையில் வெளியிடப்பட்ட”மண்டாடி” படத்தின் பர்ஸ்ட் லுக்கில் மிரட்டலாக காட்சி அளிக்கிறார் சூரி. பாய்மரக் படகின் கயிற்றைப் பிடித்து இழுத்துக்கொண்டு இருக்கிறார். அதோடு முகவை மைந்தன் என்கிற வாசகம் உள்ள டீ சர்ட் அணிந்து சக வீரர்களுடன் நிற்கிறார்.
ஆகவே இது கடற்கரைப் பகுதியில் நடக்கும் படகுப்போட்டிகள் குறித்த படமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
