நடிகர் சிரிஷ் & ஹஸ்னா திருமணம்.. பிரபலங்கள் வாழ்த்து!
சென்னையில் நடிகர் திரு. சிரிஷ் & ஹஸ்னா – ஆகியோரது திருமணம் & வரவேற்பு நிகழ்ச்சி கடந்த வாரம் (ஜூலை 12) நடைபெற்றது, திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.மெட்ரோ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் சிரிஷ். தொடர்ந்து ராஜா ரங்குஸ்கி, பிஸ்தா போன்ற படங்களில் நடித்தார்.இந்த நிலையில் நடிகர் சிரிஷிற்கு ஹஸ்னா என்பவருடன் ஜுலை 12 அன்று கோலாகலமாக திருமணம் நடந்தது. தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் சிறப்பாக அரங்கேறியது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் வருகை தந்து, மணமக்களை வாழ்த்தினர். அதே போல பிரசன்னா, சிலம்பரசன், தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன், ஆர்யா, சிநேகா ரம்பா உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் மணமக்க்ளை வாழ்த்தினர்.