“சீமான் குடிக்க மாட்டு மூத்திரம் பார்சேசேசேல்!”: திருமுருகன் காந்தி அறிவிப்பு

அப்போது அவர் கூறுகையில், ” தந்தை பெரியார் குறித்து பொய்யான – அவதூறான கருத்துக்களை தொடர்ச்சியாக பேசி வருகின்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். அவரைக் கண்டித்து பல போராட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம். வருகின்ற 20-ஆம் தேதிக்கு பிறகு பல்வேறு ஜனநாயக அமைப்புகளை ஒன்றிணைத்து சீமான் இல்லத்தை முற்றுகையிட உள்ளோம்.
மேலும், தற்பொழுது சீமான் பாஜகவுடன் நெருக்கமாக இருக்கிறார். அழைப்பு வந்ததும் பாஜகவுடன் இணைய தயாராக இருக்கிறார். இதனை அம்பலப்படுத்தும் விதமாக திமுகவிற்கும், பெரியாருக்கும் எதிராக தொடர்ச்சியாக பேசி வருகிறார். குறிப்பாக சங்கிகள் எனது நண்பர்கள் என கூறிய சீமான் சங்கிகளின் பானமாக இருக்கக்கூடிய கோமியத்தை சீமானுக்கு அனுப்பி வைக்க இருக்கிறேன். அதனை அவர் குடித்து இந்துத்துவ சார்பு கருத்துக்களை பரப்புவதற்கு அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், அதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து கோமியத்தை சீமானுக்கு அனுப்பி வைக்கும் நூதன போராட்டம் நடைபெற உள்ளது” என திருமுருகன் காந்தி கூறினார்.

